Jio, Airtel, மற்றும் VI நவம்பர் 1 முதல் OTP ப்ளாக் செய்யாது புதிய காலகெடு என்ன

Updated on 30-Oct-2024

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் டெலிகாம் ஆபரேட்டர்களுக்கு ஒன் டைம் பாஸ்வர்ட் OTP உட்பட பிஸ்னஸ் மேசெஜ்களுக்கு புதிய ட்ரெஸ்சிபிலிட்டி செயல்படுத்தும் காரணத்திற்காக டிசம்பர் 1 ஆம் தேதி வரை 1 மாத கால அவகாசம் நீட்டிப்பு வழங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த புதிய விதி ஸ்பேம் மற்றும் பிஷிங் கால்களை தடுப்பதற்க்கான நோக்கம் கொண்டுள்ளது எனவே முன்பு இதன் காலக்கெடு நவம்பர் 1 ஆக இருந்தது இப்பொழுது இந்த காலகேடை நீடித்து டிசம்பர் 1 ஆக நீடித்துள்ளது

Airtel,Jio மற்றும் VI கஸ்டமர்களுக்கு தினசரி மெசேஜ்

TRAI யின் கூற்றுப்படி, இந்த நீட்டிப்பு வெறுமனே இது ஏற்படுத்தக்கூடிய சாத்தியமான இடையூறுகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது மற்றும் டெலிகாம் ஆபரேட்டர்களுக்கு மெசேஜ் சேவைகளை சரிசெய்ய அதிக நேரத்தை வழங்குகிறது. பல பிஸ்னஸ் இன்னும் இந்த விதிகளுக்கு இணங்காததால், நவம்பர் 1 ஆம் தேதிக்குள் டிரேசிபிலிட்டி தேவைகளை அமல்படுத்துவது முக்கியமான சேவைகளை சீர்குலைக்கும் என்று டெலிகாம் ஆபரேட்டர்கள் எச்சரித்ததை அடுத்து இது வருகிறது.

OTPகள் மற்றும் பிற அத்தியாவசிய மெசேஜ்களை தடுக்கும் காரணமாக குறிப்பிடத்தக்க தாமதங்கள் அல்லது தடை செய்யப்படலாம் என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர். எனவே, TRAI இணக்க காலத்தை நீட்டிக்க வேண்டியிருந்தது. இந்த நேரத்தில், பிஸ்னஸ் TRAI யின் ஸ்பேம் எதிர்ப்பு மற்றும் கண்டறியும் நெறிமுறைகளுடன் சீரமைக்க வேண்டும்.

தொழில்துறைக்கு TRAI வழங்கிய இரண்டாவது நீட்டிப்பு இதுவாகும். முன்னதாக, URLகள் மற்றும் OTT லிங்களுடன் மெசேஜ்களை ஏற்புப் லிஸ்ட்டில் சேர்ப்பதற்கான காலக்கெடு அக்டோபர் 1 வரை நீட்டிக்கப்பட்டது.

ஸ்பேமைத் தடுக்கவும், டெலிகாம் துறையில் பாதுகாப்பை மேம்படுத்தவும் TRAI யின் முயற்சிகள், நிறுவனங்களை தடுப்புப்பட்டியலில் சேர்த்தல், மொபைல் நம்பர் ப்ளாக் செய்யப்படும் மற்றும் டெலிமார்க்கெட்டிங் கால்களை பிளாக்செயின் அடிப்படையிலான தளத்திற்கு நகர்த்துதல் ஆகியவை அடங்கும்.

இதையும் படிங்க:BSNL சூப்பர் தீபாவளி தமக்கா ஆபர் அதிரடியாக இந்த திட்டத்தின் விலை குறைப்பு கூடவே பல நன்மை

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :