Jio, Airtel, Vi அரசிடம் இந்த வெப்சைட் மூட கோரிக்கை

Updated on 19-Mar-2024
HIGHLIGHTS

டெலிகாம் டிவைஸ்களில் திருட்டு வழக்குகள் அதிகரித்து வருவதை முடிவுக்கு கொண்டு வருமாறு வேண்டுகோள்

(COAI) ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா (Vi) போன்ற ஆபரேட்டர்களை மேம்பர்களாக கொண்டுள்ளது

ஒரு பத்திரிக்கையின் அறிக்கையின் படி டெலிகாம் செகரட்டரி நீரஜ் மிட்டலுக்கு COAI கடிதம் எழுதியுள்ளது

டெலிகாம் டிவைஸ்களில் திருட்டு வழக்குகள் அதிகரித்து வருவதை முடிவுக்கு கொண்டு வருமாறு தொலைத்தொடர்பு துறை அமைப்பான COAI அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. திருடப்பட்ட உபகரணங்கள் விற்கப்படும் என்று சந்தேகிக்கப்படும் சில பிரபலமான இ-காமர்ஸ் வலைத்தளங்களை அரசாங்கம் தடை செய்ய வேண்டும் என்று அமைப்பு விரும்புகிறது. இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் (COAI) reliance jio , Bharti Airtel மற்றும் Vodafone idea(Vi) (Vi) போன்ற ஆபரேட்டர்களை மேம்பர்களாக கொண்டுள்ளது

ஒரு பத்திரிக்கையின் அறிக்கையின் படி டெலிகாம் செகரட்டரி நீரஜ் மிட்டலுக்கு COAI கடிதம் எழுதியுள்ளது இதில் டெலிகாம் சாதனங்கள் திருடப்படுவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். சில வெளிநாட்டு வெப்சைட்களை தடை செய்யுமாறும் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது, அதில் இந்த உபகரணங்கள் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்த திருட்டுகளால் நிறுவனங்களுக்கு மட்டுமின்றி வாடிக்கையாளர்களுக்கும் நஷ்டம் ஏற்படுவதாக COAI கூறுகிறது.

Jio, Airtel, Vi இந்த வெளிநாட்டு வெப்சைட்களை Block செய்ய கோரிக்கை

இந்த கடிதத்தில் COAI அதிரடியராக சில வெளிநாட்டு வெப்சைட்களை உடனடியாகத் தடை செய்யுமாறு தொலைத்தொடர்புத் துறையை (DoT) அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதில் eBay, Alibaba, Seeker816, dorfatrade மற்றும் Telefly போன்றவை அடங்கியுள்ளது. ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ நெட்வொர்க்குகளில் இருந்து திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் செயலில் உள்ள எக்யுப்மேன்ட்டிகுள் இந்த வெப்சைட்டில் விற்பனை செய்வதாக அந்தக் கடிதம் கூறுகிறது. “இந்த வெப்சைட்களை உடனடியாக ப்ளாக் செய்வது முக்கியம்” என்று எழுதியுள்ளது.

COAI படி, திருடப்பட்ட கருவிகளில் முக்கிய சாதனங்கள் RRU (ரிமோட் ரேடியோ யூனிட்) மற்றும் BBU (பேஸ்பேண்ட் யூனிட்) ஆகும். இது மட்டுமின்றி, டெலிகாம் உள்கட்டமைப்பின் பாதுகாப்பிற்காக மாநிலங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்குமாறு COAI தனது கடிதத்தின் மூலம் DoT கேட்டுள்ளதாகவும் அறிக்கை மேலும் கூறுகிறது.

இந்த prachanai மிகவும் தீவிரம் அடைத்துள்ளதாக இதில் கூடிய கவனம் செலுத்துமாறு TSP (டெலிகாம் சர்விஸ் ப்ரோவைடர் } யின் பல வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த திருட்டு சம்பவம் எக்டிவ் எக்யுப்மென்ட் மூலம் அனைத்து நேரங்களிலும் அதிகப்படியாக நடைப்பெருகிறது இது கடந்த அக்டோபர் 2023 லிருந்து அதிகப்படியாக நடப்பதாக COAI ஜெனரல் தேரஅக்தர் SP கோச்சார் மார்ச் 14 யில் அந்த கடிதத்தில் கூறியிருந்தார்

டெல்லி என்சிஆர், அசாம், ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா, பஞ்சாப், ஹரியானா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதையும் படிங்க: Vodafone Idea பயனர்களுக்கு இனி மஜா தான் ஒரு முறை ரீச்சார்ஜ் வருடம் முழுதும் ஜாலி

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :