Jio வெறும் 599 ரூபாயில் 13 OTT,550+ TV மற்றும் 1000GB டேட்டா மற்றும் பல நன்மை

Updated on 15-Feb-2024

Jio வயர்லெஸ் இன்டர்நெட் சேவை Jio AirFiber இப்பொழுது இந்தியாவில் 3939 நகரங்கள் வரை அடைந்துள்ளது. இது வீட்டில் ஒரு முழு என்டர்டைன்மென்ட் அனுபவத்தை வழங்குகிறது. நீங்கள் உங்கள் டிவியில் ஹை ஸ்பீட் இன்டர்நெட்டுடன் OTTஐ அனுபவிக்க விரும்பினால், ஜியோவின் AirFiber உங்களுக்கான சிறந்த தேர்வாக இருக்கும். அதன் ஒவ்வொரு திட்டத்திலும், வாடிக்கையாளர்கள் இலவச டிவி சேனல்கள் மற்றும் OTT மற்றும் பிராட்பேண்ட் ஆகியவற்றைப் வழங்குகிறது இதன் குறைந்த விலை திட்டம் ரூ 599 ஆகும். இந்தத் திட்டத்தைப் பற்றி தெளிவாக பார்க்கலாம்.

Jio AirFiber Rs 599 Plan

நிறுவனம் ஏர்ஃபைபர் மற்றும் ஏர்ஃபைபர் மேக்ஸ் ஆகிய இரண்டு வகையான திட்டங்களைக் கொண்டுள்ளது என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம். ஏர்ஃபைபர் மேக்ஸ் திட்டங்கள் அதிவேகத்துடன் வருகின்றன, மேலும் அவை சற்று விலை உயர்ந்தவை, அதே சமயம் ஏர்ஃபைபர் திட்டங்கள் மலிவு விலையில் உள்ளன.

ஏர்ஃபைபர் யின் மிக குறைந்த விலை திட்டம் 599ரூபாய் கொண்ட திட்டத்தில் 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது,நீங்கள் அதை 6 மாதங்கள் மற்றும் 12 மாதங்களுக்கு வாங்கலாம். இந்தத் திட்டம் 30 Mbps வரை ஸ்பீடை 1000GB வரை டேட்டாவையும் வழங்குகிறது, மேலும் பயனர்கள் டேட்டா வரம்பு நுகர்ந்த பிறகும் 64 Kbps வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்துவதைத் தொடரலாம். காலிங் வசதி இந்த திட்டத்தில் சேர்க்கப்படவில்லை.

இது தவிர, இந்த திட்டத்தில் 550 க்கும் மேற்பட்ட டிவி சேனல்கள் கிடைக்கின்றன, மேலும் 13 OTT சந்தாக்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. இந்த OTT சந்தாக்களில் Disney + Hotstar, Sony Liv, ZEE5, JioCinema, Sun NXT, Hoichoi, Discovery +, ALTBalaji, Eros Now, Lionsgate Play, ShemarooMe, DocuBay மற்றும் EPIC ON ஆகியவை அடங்கும். வழங்கப்பட்ட STB மூலம் டிவியில் சேனல்களை ரசிக்கலாம். லேப்டாப், டிவி மற்றும் மொபைலிலும் OTT ஆப்ஸைப் பார்க்கலாம்.

Free யில் வைக்கலாம் JioAirFiber

ஜியோ ஏர்ஃபைபர் அமைப்பு உட்புற மற்றும் வெளிப்புற அலகுகளை உள்ளடக்கியது. வெளிப்புற அலகுகள் வீட்டிற்கு வெளியே அல்லது கூரையில் நிறுவப்பட்டுள்ளன, அதே நேரத்தில் இன்டோர் யூனிட் வீட்டிற்குள் இன்ஸ்டால் செய்யப்படுகின்றன

இதையும் படிங்க:Xiaomi 14 Ultra டிசைன் உட்பட அறிமுகத்திற்க்கு முன்னே பல தகவல் லீக்

நிறுவனத்தின் வேப்சைட்டின்படி இன்ச்டலேசனுக்கு ரூ 1000 வசூலிக்கப்படுகிறது, ஆனால் நீங்கள் நிறுவலை இலவசமாக செய்து கொள்ளலாம், இதற்காக நீங்கள் வருடாந்திர திட்ட விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். கிரெடிட்/டெபிட் கார்டு மூலமாகவும் EMIயில் வருடாந்திர திட்டத்தை வாங்கலாம். அதன் அமைப்பில் Wi-Fi ரூட்டர், 4K ஸ்மார்ட் செட்-டாப் பாக்ஸ் (STB) மற்றும் குரல்-செயல்படுத்தப்பட்ட ரிமோட் ஆகியவை அடங்கும்.

JioAirFiber கனெக்சன் எப்படி பெறுவது?

வாட்ஸ்அப் மூலம் ஜியோ ஏர்ஃபைபர் சேவையை முன்பதிவு செய்ய, 60008-60008 என்ற நம்பருக்கு மிஸ்டு கால் கொடுக்கலாம். இது தவிர, நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட் அல்லது அருகிலுள்ள கடைக்குச் சென்று கனேக்சனை பெறலாம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :