Relience Jio 8வது ஆண்டு விழாவில் மக்களை குஷிபடுத்த பல பிளான்கள் அறிவிப்பு

Relience Jio 8வது ஆண்டு விழாவில் மக்களை குஷிபடுத்த பல பிளான்கள் அறிவிப்பு
HIGHLIGHTS

Reliance Jio 8th Anniversary) ஜியோ பயனர்களுக்கு ஆண்டுவிழா ஆஃபருடன் வந்துள்ளது.

ரூ,899 மற்றும் ரூ,999 மற்றும் ரூ,3599 வருடாந்திர திட்டத்துடன் பயனர்களுக்கு ரூ,700 மதிப்புள்ள பலன்களை வழங்குகிறது

இந்தத் திட்டங்களில் எந்த எந்த திட்டத்தில் என்ன நன்மை வழங்குகிறது என்று பார்க்கலாம். வாங்க

Relience Jio அதன் 8வது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக (Reliance Jio 8th Anniversary) ஜியோ பயனர்களுக்கு ஆண்டுவிழா ஆஃபருடன் வந்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட ரீசார்ஜ் திட்டங்களில் மொபைல் பயனர்கள் இந்த சிறப்புச் சலுகையைப் பெறலாம். உண்மையில், நிறுவனம் அதன் காலாண்டுத் திட்டங்களான ரூ,899 மற்றும் ரூ,999 மற்றும் ரூ,3599 வருடாந்திர திட்டத்துடன் பயனர்களுக்கு ரூ,700 மதிப்புள்ள பலன்களை வழங்குகிறது. இந்தத் திட்டங்களில் எந்த எந்த திட்டத்தில் என்ன நன்மை வழங்குகிறது என்று பார்க்கலாம். வாங்க

Reliance Jio 8th Anniversary திட்டங்கள்

நிறுவனம் அதன் காலாண்டு திட்டங்களான ரூ,899 மற்றும் ரூ,999 மற்றும் ரூ,3599 வருடாந்திர திட்டங்களுடன் பயனர்களுக்கு இலவச பலன்களை வழங்குகிறது. இந்தத் திட்டங்களில் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்

Jio 899ரூபாய் கொண்ட திட்டம்: ரூ.899 திட்டத்தில், கஸ்டமர்களுக்கு தினசரி 2 ஜிபி 5ஜி டேட்டாவுடன் 20 ஜிபி கூடுதல் டேட்டா கிடைக்கும். அதே நேரத்தில், அன்லிமிடெட் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS நன்மைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகின்றன. இது தவிர, ரீசார்ஜ் செய்வதற்கான வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும்.

Jio யின் ரூ.999 திட்டம்: ஜியோவின் ரூ.999 திட்டம் 98 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. 98 நாட்கள் வேலிடிட்டியாகும் இந்த திட்டத்தில், கஸ்டமர்கள் அன்லிமிடெட் வொயிஸ் கால்களை வழங்குகிறது இதில் தினசரி 100 SMS மற்றும் தினசரி அடங்கும் மற்றும் இதில் தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கிறது. திட்டத்தின் முழு வேலிடிட்டி போது, ​​கஸ்டமர்கள் மொத்தம் 196ஜிபி அன்லிமிடெட் 5ஜியைப் வழங்குகிறது

Jio யின் ரூ.3599 திட்டம்: இதில், 365 நாட்கள் வேலிடிட்டியை நிறுவனம் வழங்குகிறது. அதே நேரத்தில், நிறுவனம் இன்டர்நெட் பயன்படுத்துவதற்கான திட்டத்தில் ஒவ்வொரு நாளும் 2.5 ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது. இதுமட்டுமின்றி இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் நாடு முழுவதும் உள்ள அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் காலிங் மற்றும் தினசரி 100 இலவச SMS நன்மைகளை வழங்கும். இந்தத் திட்ட பயனர்கள் ஜியோ டிவி மற்றும் ஜியோ சினிமாவுக்கும் இலவச அக்சஸ் வழங்குகிறது

Reliance Jio 8th Anniversary மற்ற நன்மைகள்

  • சலுகையில், ₹175 மதிப்புள்ள 10 OTT ஆப்ஸின் சப்ச்க்ரிப்சனுடன் 10 ஜிபி டேட்டா பேக் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.
  • அதே நேரத்தில், இந்த சலுகையின் வேலிடிட்டி 28 நாட்களாக இருக்கும். இது தவிர, Zomatoவின் 3 மாத கோல்ட் மெம்பர்ஷிப் இலவசமாக வழங்கப்படும்.
  • இது தவிர, ₹ 2999க்கு மேல் AJIO யில் ஷாப்பிங் செய்யும் பயனர்கள் ரூ. 500 மதிப்புள்ள வவுச்சரைப் வழங்குகிறது
  • மேலும் இந்த ஆபரின் நன்மை செப்டம்பர் 5 முதல் செப்டம்பர் 10 வரை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு மட்டுமே சலுகை கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.

Jio அறிமுக செய்த 8 ஆண்டு திட்டங்கள்

8 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜியோவுக்கு 49 கோடிக்கும் அதிகமான பயனர்கள் உள்ளனர். இந்த காலகட்டத்தில், ஜியோ வயர்லெஸ் மற்றும் வயர்லைன் துறைகளில் சந்தையில் முன்னணியில் உள்ளது. ஜியோவில் சுமார் 13 கோடி 5ஜி பயனர்கள் உள்ளனர். ஜியோ உலகின் மிகப்பெரிய மற்றும் வேகமான தனித்த 5G நெட்வொர்க்கை உருவாக்கியுள்ளது. நாட்டில் நிறுவப்பட்ட அனைத்து 5G BTS இல், 85 சதவீதத்திற்கும் அதிகமானவை ஜியோவைச் சேர்ந்தவை.

இதையும் படிங்க பட்டய கிளப்பும் BSNL வெறும் ரூ,250 யில் 45 நாட்கள் வேலிடிட்டி தலையை பிச்சிக்கும் Jio

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo