கடந்த 2016ஆம் ஆண்டு தொலைத்தொடர்பு துறையில் அறிமுகம் செய்யப்பட்ட ஜியோ, வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது இலவச வாய்ஸ் கால், அதிவேக இலவச டேட்டா மூலம் ஏராளமானோர் ஜியோவிற்கு மாறினர். இதனால் குறுகிய காலத்தில் ஜியோ பெருவளர்ச்சி கண்டது.
இதைக் கண்டு பிற போட்டி நிறுவனங்கள், பல்வேறு சலுகைகளை அளிக்கத் தொடங்கின.
இந்நிலையில் 8 திட்டங்களில் அதிரடி விலை குறைப்பு மற்றும் கூடுதல் சலுகைகளை ஜியோ வழங்கியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
1) ரூபாய்.199 toரூபாய்.149 திட்டம்:
இதுவரை ரூ.199 திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி, நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா, வரம்பற்ற இலவச வாய்ஸ் கால் சேவை வழங்கப்பட்டு வந்தது. இதன் விலை ரூ.149ஆக குறைக்கப்பட்டுள்ளது.
2) ரூபாய்.399 to ரூபாய் .349 திட்டம்:
இதுவரை ரூ.399 திட்டத்தில் 70 நாட்கள் வேலிடிட்டி, நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா, வரம்பற்ற இலவச வாய்ஸ் கால் சேவை வழங்கப்பட்டது. இதன் விலை ரூ.349ஆக குறைக்கப்பட்டுள்ளது.
3) ரூபாய்.459 to ரூபாய்.399 திட்டம்:
இதுவரை ரூ.459 திட்டத்தில் 84 நாட்கள் வேலிடிட்டி, நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா, வரம்பற்ற இலவச வாய்ஸ் கால் சேவை வழங்கப்பட்டது. இதன் விலை ரூ.399ஆக குறைக்கப்பட்டுள்ளது.
4) ரூபாய்.499 to ரூபாய்.449 திட்டம்:
இதுவரை ரூ.499 திட்டத்தில் 91 நாட்கள் வேலிடிட்டி, நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா, வரம்பற்ற இலவச வாய்ஸ் கால் சேவை வழங்கப்பட்டது. இதன் விலை ரூ.449ஆக குறைக்கப்பட்டுள்ளது.
5) ரூபாய் 198 திட்டம்:
இதுவரை ரூ.198 திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி, நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா, வரம்பற்ற இலவச வாய்ஸ் கால் சேவை வழங்கப்பட்டது. இனி நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படும்.
6) ரூபாய்.398 திட்டம்:
இதுவரை ரூ.398 திட்டத்தில் 70 நாட்கள் வேலிடிட்டி, நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா, வரம்பற்ற இலவச வாய்ஸ் கால் சேவை வழங்கப்பட்டது. இனி நாள் ஒன்றிற்கு 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படும்.
7) ரூபாய் 448 திட்டம்:
இதுவரை ரூ.448 திட்டத்தில் 84 நாட்கள் வேலிடிட்டி, நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா, வரம்பற்ற இலவச வாய்ஸ் கால் சேவை வழங்கப்பட்டது. இனி நாள் ஒன்றிற்கு 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படும்.
8) ரூபாய்.498 திட்டம்:
இதுவரை ரூ.498 திட்டத்தில் 91 நாட்கள் வேலிடிட்டி, நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா, வரம்பற்ற இலவச வாய்ஸ் கால் சேவை வழங்கப்பட்டது. இனி நாள் ஒன்றிற்கு 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படும்.
இந்த புதிய சலுகைகள் அனைத்து, வரும் 9ஆம் தேதி முதல் ரீசார்ஜ் செய்யும் பயனாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது.