இன்று ஜியோவின் அதிவேக 5ஜி சேவை 27 நகரங்களில் தொடங்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் திருநெல்வேலியில் மாவட்டத்தில் இன்று முதல் முதல் முறையாக 5ஜி சேவையை ஜியோ நிறுவனம் தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், வேலூர், ஓசூர், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, தூத்துக்குடி, கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், கரூர், கும்பகோணம், நாகர்கோவில், தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி மற்றும் பாண்டிசேரியில் ஜியோவில் 5ஜி சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நகரங்களில் முதன்முதலில் 5ஜி சேவையை வழங்கும் ஒரே நிறுவனமாக ஜியோ விளங்கிவருகிறது.
இன்று இதனுடன் ஆந்திரப்பிரதேசம், பீகார், சண்டிஸ்கர், குஜராத், ஹிமாசல் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடக, மகாராஷ்டிரா, உத்திர பிரதேசம், உத்தரகாண்ட மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய நகரங்களில் உள்ள 27 நகரங்களுக்கு இன்று முதல் ஜியோ ட்ரூ 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஜியோ செய்தி தொடர்பாளர் கூறுகையில், ஜியோ சேவையை மேலும் 27 நகரங்களில் தொடங்குவது மகிழ்ச்சியளிப்பதாகவும், 120 நாட்களில் e Beta Trial launch திட்டத்தை நிறைவு செய்துள்ளதாக கூறியுள்ளார். 2023 டிசம்பர் மாதத்திற்குள் நாடு முழுவதும் ஜியோவில் 5 ஜி சேவையை வழங்குவதை இலக்காக வைத்துச் செயல்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் தொடக்க ஆஃபராக ஜியோ வாடிக்கையாளர்களுக்கு 1 Gbps+ வேகத்தில் அன்லிமிடெட் இன்டர்நெட் சேவையைக் கூடுதல் கட்டணம் இன்றி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.