IPL 2019 தொடர்ந்து BSNL வாடிக்கையாளர்களுக்கு அதிரடி ஆபர் அறிவித்துள்ளது..!

Updated on 25-Mar-2019
HIGHLIGHTS

SNL யின் இந்த சலுகை ரூ.199 மற்றும் ரூ.499 விலையில் கிடைக்கும் இரு சலுகைகளில் பயனர்களுக்கு டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் இலவச கிரிகெட் SMS அலெர்ட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது

BSNL  நிறுவனம்  பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு IPL  2019 போட்டியை தொடர்ந்து அதன் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளை  அறிவித்துள்ளது இதனுடன்  இந்திய பிரீமியர் லீக் கிரிகெட் தொடர் துவங்கியிருப்பதை தொடர்ந்து புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன

BSNL யின் இந்த சலுகை ரூ.199 மற்றும் ரூ.499 விலையில் கிடைக்கும் இரு சலுகைகளில் பயனர்களுக்கு டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் இலவச கிரிகெட் SMS அலெர்ட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதில் போட்டி பற்றிய தகவல்கள் பயனர்களுக்கு SMS  வடிவில் அனுப்பப்படும்.

BSNL . ரூ.199 பிரீபெயிட் சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. இலவச அழைப்புகள் ஒரு வட்டாரத்திற்கு மட்டுமே பொருந்தும் என்பதால், பயனர்கள் மற்ற வட்டாரங்களில் பேச தனி கட்டணம் வசூலிக்கப்படும். அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் தவிர பயனர்களுக்கு 1 ஜி.பி. டேட்டா தினமும் வழங்கப்படுகிறது.

28 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கும் இச்சலுகையில் பயனர்களுக்கு IPL . கிரிகெட் போட்டிகள் தொடர்பான தகவல்கள் SMS  வடிவில் இலவசமாக வழங்கப்படுகின்றன. ரூ.199 மற்றும் ரூ.499 சலுகைகள் இந்தியா முழுக்க 20 வட்டாரங்களில் வழங்கப்படுகிறது.

அதுவே ரூ.499 சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தேசிய ரோமிங்குடன் வழங்கப்படுகிறது. இத்துடன் 1 ஜி.பி. டேட்டா, தினமும் 100 SMS , இலவச கிரிகெட் போட்டி தொடர்பான எஸ்.எம்.எஸ்.கள் வழங்கப்படுகிறது. இச்சலுகை 90 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது. 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :