இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் முதல் IPL போட்டி தொடங்கி, ஐபில் கோப்பைக்கான இறுதிப்போட்டி நடக்கும் நாள் வரையிலாக அனைத்து மைதானங்களிலும் ஏர்டெல் நிறுவனத்தின் மேசிவ் மிமோ ப்ரீ-5ஜி தொழில்நுட்ப (Massive MIMO Pre-5G technology) சோதனை நடக்கவுள்ளது.
ஏப்ரல் 7 ஆகிய இன்று முதல் தொடங்கும் IPL கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் ஸ்டேடியத்தில் ஏர்டெல் இலவச 5ஜி சேவையை வழங்க போவதாக ஏர்டெல் அறிவித்துள்ளது
டெல்லி, மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா, மொஹலலி, இந்தூர், ஜெய்ப்பூர், பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய இடங்களில், இன்றுமுதல் IPL போட்டிகள் நடைபெற உள்ளன .
ஏர்டெல் ஏற்கனவே அதிவேக 4G நெட்வர்க் \வழங்கி வரும் நிலையில் இப்பொழுது IPL போட்டியை தொடர்ந்து நமது ரசிகர்களுக்காக சிரு முயற்சியின் ஒரு பகுதியாக, IPL போட்டிகள் நடக்கும் மைதானங்களில், அதிக வேகமான மற்றும் அதிக திறன் கொண்ட இன்-ஸ்டேடியா நெட்வொர்க் (in-stadia network) அனுபவத்தை கொடுக்கும் மேம்பட்ட ப்ரீ-5ஜிதொழில்நுட்பத்தை வழங்குகிறது ".
"ஏர்டெல் நிறுவனம் அதன் Massive mimo செயல்பாட்டை டெஸ்ட் செய்ய போகும் முதல் இடம், மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியம் (Wankhede Stadium) ஆகும்.." என்று, ஏர்டெல் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளதும்
மேலும் "இது எங்கள் வாடிக்கையாளர்களுக்கான டிஜிட்டல் அனுபவத்தை அதிகரிக்கும் என்றும், ஏர்டெல் தெரிவித்துள்ளது எந்த ஒரு இடையூறு இல்லாத நெட்வேர்க்காக இருக்கும் (போஸ்ட் மற்றும் ஸ்ட்ரீமிங்) என ஏர்டெல் நம்பிக்கை தெரிவித்துள்ளது