ரிலையன்ஸ் ஜியோ தனது Work From Home பிளானை அதிரடியாக மாற்றியுள்ளது.
ஜியோ எண் பேஸ் பிளான் நிறைவுறும் வரை வழங்கப்படும் என கூறப்பட்டது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வொர்க் ஃபிரம் ஹோம் ஆட் ஆன் சலுகையின் வேலிடிட்டியை 30 நாட்களாக மாற்றியுள்ளது. கடந்த வார அறிவிப்பின் படி இவற்றுக்கான வேலிடிட்டி குறிப்பிட்ட ஜியோ எண் பேஸ் பிளான் நிறைவுறும் வரை வழங்கப்படும் என கூறப்பட்டது.
முன்னதாக ரூ. 151, ரூ. 201 மற்றும் ரூ. 251 விலையில் ஆட் ஆன் பேக்குகளை ரிலையன்ஸ் ஜியோ அறிவித்தது. எனினும், பேஸ் பிளான் சார்ந்த வேலிடிட்டியை மாற்றி ஆட் ஆன் சலுகைக்கான வேலிடிட்டியை 30 நாட்களாக ரிலையன்ஸ் ஜியோ மாற்றியுள்ளது.
முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 2399 விலையில் வருடாந்திர பிரீபெயிட் சலுகை ஒன்றை அறிவித்தது. இதில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, ஜியோ எண்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்த சலுகைகளில் வாடிக்கையாளர்களுக்கு முறையே 30 ஜிபி, 40 ஜிபி மற்றும் 50 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. முன்னதாக ரூ. 11, ரூ. 21, ரூ. 51 மற்றும் ரூ. 101 விலையில் ஆட் ஆன் சலுகைகளை அறிவித்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile