ரிலையன்ஸ் ஜியோ பல வகையான திட்டங்களை வழங்குகிறது. ஆனால் ஒரு சிறந்த போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை ஜியோ வழங்குகிறது, இது ரூ 399 க்கு வருகிறது. இந்த திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், இதில் 575க்கும் மேற்பட்ட இலவச டிடிஎச் சேனல்கள் வழங்கப்படுகின்றன. இதனுடன், அன்லிமிடெட் அழைப்பு, 75 ஜிபி டேட்டாவுடன் இதர நன்மைகள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
ஜியோவின் ரூ.399 திட்டத்தில் ஒரு மாதத்திற்கு மொத்தம் 75ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. டேட்டா தீர்ந்துவிட்டால், பயனர்களுக்கு ஒரு ஜிபி டேட்டாவிற்கு ரூ.10 வசூலிக்கப்படும். இது தவிர, இந்த திட்டத்தில் 200ஜிபி டேட்டா ரோல்ஓவர் வழங்கப்படுகிறது. திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்புடன் 100SMS வசதி வழங்கப்படும். மேலும், Amazon Prime, Disney + Hotstar மற்றும் Netflix ஆகியவற்றின் இலவச சந்தா வழங்கப்படும். ஜியோவின் ரூ.399 திட்டமானது இலவச ஜியோ டிவி சந்தாவுடன் வருகிறது. இந்த திட்டத்தில், பயனர்கள் 575 க்கும் மேற்பட்ட இலவச DHD டிவி சேனல்களைப் பெறுவார்கள்.