நீங்க மட்டும் தான் ஆபர் கொடுப்பீங்களா நாங்களும் 30 ஜிபி இலவச டேட்டா கொடுப்போம் ஐடியா அதிரடி…!

Updated on 21-Jun-2018
HIGHLIGHTS

வோல்ட்இ சேவைக்கு அப்கிரேடு செய்யும் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு ஹெச்டி தரத்தில் வாய்ஸ் கால்கள், அதிவேக கால் செட்டப் நேரம், 4ஜி டேட்டா உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்த முடியும்.

ஐடியா செல்லுலார் நிறுவனம் கடந்த மாதம் ஆறு வட்டாரங்களில் Volte  E  சேவைகளை ஆரம்பித்தது பின் கூடுதலாக ஒன்பது வட்டாரங்கள் மற்றும் இறுதியாக ஐந்து வட்டாரங்களில் வோல்ட்இ சேவைகளை ஆரம்பித்துள்ளது. இந்தியா முழுக்க 20 வட்டாரங்களில் தற்சமயம் ஐடியா வோல்ட்இ சேவைகள் வழங்குகிறது . 

இப்பொழுது ஐடியா வாடிக்கையாளர்களுக்கு 10 ஜிபி இலவச டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது. முதல் வோல்ட் E  சேவைகளை மேற்கொள்வோருக்கு 10 ஜிபி டேட்டாவும், நான்கு வாரங்களுக்கு பின் சேவை குறித்த விமர்சனங்களை வழங்குவோருக்கு 10 ஜிபி டேட்டா மற்றும் எட்டாவது வாரத்தில் மீண்டும் விமர்சனம் வழங்குவோருக்கு 10 ஜிபி டேட்டா என மொத்தம் 30 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

 paytm இந்த எலக்ட்ரோனிக் வழங்குகிறது அதிரடி டீல்ஸ் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள் 

வோல்ட்இ சேவைக்கு அப்கிரேடு செய்யும் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு ஹெச்டி தரத்தில் வாய்ஸ் கால்கள், அதிவேக கால் செட்டப் நேரம், 4ஜி டேட்டா உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்த முடியும். இத்துடன் வோல்ட்இ சேவையில் அழைப்புகளை மேற்கொள்ள பயனர்கள் எவ்வித கூடுதல் கட்டணும் செலுத்த வேண்டியதில்லை. இதற்கான கட்டணம் பயனர் தேர்வு செய்திருக்கும் திட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்கும்.

இத்துடன் 4ஜி வோல்ட்இ நெட்வொர்க் கிடைக்காத இடத்தில் பயனர்கள் தானாக 2ஜி/3ஜி நெட்வொர்க்-க்கு மாற்றப்பட்டு விடும். தற்சமயம் செலக்ட் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களில் மட்டும் ஐடியா VOLTE வழங்கப்படும் நிலையில் விரைவில் பல்வேறு நிறுவன சாதனங்களில் VOLTE வழங்கப்பட இருக்கிறது.

ஐடியா வாடிக்கையாளர்களுக்கு வோல்ட்இ அம்சம் தானாக ஆக்டிவேட் செய்யப்படும் நிலையில், இவ்வாறு ஆக்டிவேட் ஆகாத பட்சத்தில் பயனர்கள் ‘ACT VOLTE’ என டைப் செய்து 12345 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். வோல்ட்இ சேவையை பயன்படுத்துவோர் தங்களது ஐடியா 4ஜி சிம் கார்டை ஸ்மார்ட்போனின் சிம் ஸ்லாட் 1-இல் போட வேண்டும்.

 paytm இந்த எலக்ட்ரோனிக் வழங்குகிறது அதிரடி டீல்ஸ் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள் 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :