ஜியோயோவை போலவே கேஷ்பேக் சலுகை உடன் கொண்டு வந்துள்ளது ஐடியா செல்லுலார் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு செலக்ட் செய்யப்பட்ட ரீசார்ஜ்களுக்கு கேஷ்பேக் மற்றும் பரிசுகள் வழங்குகிறது .
அந்த வகையில் ரூ.100 ரீசார்ஜ் செய்யும் போது ரூ.20 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. கூப்பன் வடிவில் வழங்கப்படும் இந்த தொகையை கொண்டு ரூ.199 மற்றும் அதற்கும் அதிக விலையுள்ள ரீசார்ஜ்களுக்கு பயன்படுத்த முடியும். இந்த சலுகையை பெற அனைத்து ரீசார்ஜ்களும் மை ஐடியா ஆப் அல்லது ஐடியா வெப்சைட்டில் செல்ல வேண்டும்.
இத்துடன் ஐடியா அறிவித்திருக்கும் மற்றொரு திட்டத்தில் அன்லிமிட்டெட் ரீசார்ஜ் செய்யும் போது பிரீபெயிட் வாடிக்கையாளர்கள் கேஷ்பேக், கார்கள், பைக்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களை வென்றிட முடியும். ரிலையன்ஸ் ஜியோவை எதிர்கொள்ள ஐடியா அறிவித்திருக்கும் புதிய வழிமுறையாக இது பார்க்கப்படுகிறது.
ஜூன் 5 முதல் ஆகஸ்டு 15-ம் தேதி வரை ஐடியா ஆப் அல்லது அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் ரூ.100 ரீசார்ஜ் செய்யும் போது ரூ.20 கேஷ்பேக் கூப்பன் வழங்கப்படுகிறது. இந்த கூப்பனை ரூ.199 அல்லது அதற்கும் அதிக தொகை செலுத்தும் போது பயன்படுத்திக் கொள்ள முடியும்.
ரூ.199 சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.4 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங், ரோமிங், தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. ஐடியா பிரீபெயிட் ரூ.398 சலுகையில் முந்தைய ரூ.199 சலுகையில் வழங்கப்பட்ட சேவைகள் வழங்கப்படுகிறது. இருப்பினும் ரூ.398 சலுகையில் 70 நாட்கள் வேலிடிட்டியும், ரூ.199 சலுகையில் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது.
சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு ஹாலிடே ஹங்காமா என்ற பெயரில் இதே போன்ற சலுகையை அறிவித்தது. இதில் ரூ.399 மற்றும் அதற்கும் அதிக விலைக்கு ரீசார்ஜ் செய்வோருக்கு ரூ.50 கேஷ்பேக் வழங்கப்படுகிறது .