Idea Cellular கடந்த நாட்களாக புதிய டேரிஃப் திட்டத்தை கொண்டு வந்துள்ளது, இப்பொழுது நிறுவனம் மற்றும் ஒரு புதிய ப்ரீபெய்Iட் திட்டத்தை Rs 295 யில் கொண்டுவந்துள்ளது. இந்த திட்டத்தில் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் உடன் மோதும் விதமாக அமைகிறது. ஐடியாவில் அதன் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தில் 42 நாட்களின் வேலிடிட்டி உடன் மோதும் விதமாக இருக்கிறது . ஐடியாவின் அதன் ப்ரீபெய்ட் ரிச்சார்ஜ் திட்டத்தை 42 நாட்களுடன் வேலிடிட்டி உடன் அறிமுகம் ஆகிறது.
42 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ள ஐடியா செல்லுலார் புதிய பிரீபெயிட் சலுகையில் பயனர்களுக்கு மொத்தம் 5 ஜி.பி. 3ஜி / 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகள் வழங்கப்படுகிறது. எனினும் வாய்ஸ் கால் அளவு தினசரி அடிப்படையில் 250 நிமிடங்களும் வாரத்திற்கு 1000 நிமிடங்கள் என கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.
நிர்ணயிக்கப்பட்ட அளவு நிறைவுற்றதும், வாய்ஸ் கால் கட்டணம் நொடிக்கு 1 பைசா என்றும், சலுகையில் வழங்கப்படும் 5 ஜி.பி. டேட்டா தீர்ந்ததும், 10 கே.பி. டேட்டா கட்டணம் 4 பைசா என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஏர்டெல் நிறுவனம் ரூ.299 விலையில் வழங்கும் சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி வழங்கப்படுகிறது. எனினும் இந்த சலுகையில் டேட்டா மற்றும் எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படவில்லை. சில வட்டாரங்களில் மட்டும் தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு ரூ.299 சலுகையில் எஸ்.எம்.எஸ். மற்றும் டேட்டா வழங்கப்படுகிறது.
வோடபோன் நிறுவனம் ரூ.279 விலையில் வழங்கும் சலுகை 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. அதிக வேலிடிட்டி வழங்கும் விலை குறைந்த சலுகையாக இது இருக்கிறது. இந்த சலுகையில் பயனர்களுக்கு 4 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
எனினும் ஐடியா சலுகையை போன்று வோடபோன் சலுகையிலும் வாய்ஸ் கால் அளவு தினமும் 250 நிமிடங்களும், வாரத்திற்கு 1000 நிமிடங்கள் என கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.