ஐடியாவின் புதிய ஆபரில் ரூ.149யில் 33GB டேட்டாவை வழங்குகிறது…!

ஐடியாவின் புதிய ஆபரில் ரூ.149யில்  33GB டேட்டாவை வழங்குகிறது…!
HIGHLIGHTS

இந்த சலுகையானது ஏர்டெல் மற்றும் ஜியோ உடன் போட்டி இடும் வகையில் இது அமைந்து உள்ளது

ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் போட்டியை எதிர்கொள்ள ஐடியா செல்லுலார் புதிய சலுகையை அறிவித்துள்ளது. ரூ.149 விலையில் அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய சலுகையில் டேட்டா, வாய்ஸ் கால் மற்றும் SMS . நன்மைகள் போன்றவை இதில் வழங்குகிறது .

ஐடியா செல்லுலார் ரூ.149 புதிய சலுகையில் மொத்தம் 33 GB டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் தினமும் 100 SMS 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் தினமும் 250 நிமிடங்களும், வாரத்திற்கு 1000 நிமிடங்களுக்கும் வழங்கப்படுகிறது. மேலும் வேலிடிட்டி காலத்தில் பயனர்கள் 100 வெவ்வேறு நம்பர்களுக்கு கால்களை மேற்கொள்ள முடியும்.

ஐடியா தற்சமயம் அறிவித்திருக்கும் ரூ.149 சலுகை இதே விலையில் ஏர்டெல் மற்றும் ஜியோ வழங்கும் சலுகைகளுக்கு போட்டியாக அமைந்துள்ளன. ஜியோ வழங்கும் ரூ.149 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 SMS. வழங்கப்படுகிறது. மேலும் ஜியோ பயனர்கள் இந்த சலுகையை 42 நாட்களுக்கு பெற முடியும்.

ஏர்டெல் வழங்கும் சலுகையில் தினமும் 1 ஜி.பி. டேட்டா, அன்லிமி்ட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 SMS . உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஐடியா தற்சமயம் அறிவித்து இருக்கும் புதிய சலுகை முதற்கட்டமாக கர்நாடகா, ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா போன்ற வட்டாரங்களில் மட்டுமே வழங்கப்படுகிறது.

முன்னதாக வோடபோன் சார்பில் ஆறு புதிய காம்போ ரீசார்ஜ்கள் அறிவிக்கப்பட்டன. செலக்ட் செய்யப்பட்ட வட்டாரங்களில் மட்டும் அறிவிக்கப்பட்ட புதிய சலுகைகளில் டாக்டைம், டேட்டா மற்றும் ரேட் கட் பலன்கள் 28 நாட்கள் துவங்கி அதிகபட்சம் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருந்தன. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo