குடியரசு நாளை முன்னிட்டு ஜியோ வழங்கிய புதிய திட்டத்திர்ற்கு போட்டியாக இப்பொழுது ஐடியாவும் களமிறங்கியுள்ளது ஒரு புதிய திட்டத்துடன்.

குடியரசு  நாளை முன்னிட்டு  ஜியோ வழங்கிய  புதிய திட்டத்திர்ற்கு போட்டியாக இப்பொழுது  ஐடியாவும்  களமிறங்கியுள்ளது ஒரு புதிய திட்டத்துடன்.
HIGHLIGHTS

ஐடியாவின் ரூ.199, ரூ.449 மற்றும் ரூ.509/-ல் அதிரடி திருத்தங்கள்.!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ அதன் குடியரசு தின 2018 திட்டங்களை அறிவித்த பின்னர் மற்ற டெலிகாம் நிறுவனங்களும் அதன் திட்டங்களை திருத்தி அமைக்குமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில்  ஐடியா மிகவும் கணிக்கக்கப்பட்ட ஒரு அறிவிப்பை அறிவித்துள்ளது . இந்தியாவின் மூன்றாவது பெரிய டெலிகாம் நிறுவனமான ஐடியா செல்லுலார் இன்று தனது அன்லிமிட்டட் ப்ரீபெய்ட் காம்போ திட்டங்களை திருத்தியுள்ளது. 

பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் அறிவிக்கப்பட்ட இந்த திருத்தத்தின் கீழ் ஐடியாவின் மூன்று ப்ரீபெய்ட் கட்டணத் பிளான்களின்  நன்மைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது ஐடியா ரூபாய் .199, ரூபாய் .449 மற்றும் ரூபாய் .509/- ஆகிய மூன்று திட்டங்களில்  திருத்தங்கள் கொண்டுவந்துள்ளது . அதென்ன திருத்தம்.? இந்த பிளான்களின் புதிய மற்றும்  விவரங்களை  பார்ப்போம் 

இப்போது இந்த மூன்று திட்டங்களும் ஒரு நாளைக்கு 1.4 GB அளவிலான டேட்டாவை வழங்குகிறது . டேட்டா பயன்பாட்டுடன் இணைந்து, இந்த மூன்று பிளானில்  அன்லிமிட்டட் வொய்ஸ் கால்கள் மற்றும் நாள் ஒன்றுக்கு 100 SMS  ஆகிய நன்மைகளையும் வழங்குகின்றன.

ஐடியாவின் ரூபாய்.199/- ப்ரீபெய்ட் கட்டண திட்டமானது மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் மற்றும் ஒரு நாளைக்கு 1.4GB  அளவிலான டேட்டா வழங்கும். ஆக மொத்தம் இதன் வேலிடிட்டி 39GB  அளவிலான டேட்டாவை வழங்கும். 

மற்றொரு ப்ரீபெய்ட் திட்டமான ரூபாய் .449/- ஆனது, மொத்தம் 82 நாட்களுக்கு வேலிடிட்டி  இருக்கும் மற்றும் ஒரு நாளைக்கு 1.4GB  அளவிலான டேட்டா வழங்கும். ஆக மொத்தம் இதன் வேலிடிட்டி  114GB  அளவிலான டேட்டாவை வழங்கும். 

மூன்றாவது திருத்தம் பெற்ற  ரூபாய் .509/- ஆனது, மொத்தம் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் மற்றும் ஒரு நாளைக்கு 1.4GB  அளவிலான டேட்டா வழங்கும். ஆக மொத்தம் இதன் வேலிடிட்டி 126ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். 

சென்னை உட்பட இதர தமிழ்நாடு வட்டாரங்களில் இந்தத் திட்டத்தை உறுதி செய்ய முடிகிறது. நாளை பிற்பகுதியில் மற்ற வட்டாரங்களில் இந்த திருத்தம் உறுதிப்படுத்தபடும்  எதிர்பார்க்கிறோம். 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo