Trai யின் புதிய ரூல் இன்று முதல் அமலுக்கு வருகிறது, அவை என்ன என்ன பாருங்க மக்களே

Updated on 01-Sep-2024
HIGHLIGHTS

ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதி பல மாற்றங்களைக் கொண்டுவருகிறது

இதேபோல், 1 செப்டம்பர் 2024 முதல் பல புதிய மாற்றங்கள் வருகின்றன.

UIDAI யின் இலவச சேவை செப்டம்பர் 14 முதல் நிறுத்தப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதி பல மாற்றங்களைக் கொண்டுவருகிறது. இதேபோல், 1 செப்டம்பர் 2024 முதல் பல புதிய மாற்றங்கள் வருகின்றன. இதில் கூகுள், Aadhaar Card மற்றும் TRAI யின் விதிகள் அடங்கும், இது ஏர்டெல், ஜியோ, வோடபோன்-ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் பயனர்கள் மொபைல் மற்றும் ஆன்லைன் மூலம் பணம் செலுத்துவதில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். இன்று முதல் மாறும் விதிகளில் கூகுள் மற்றும் டிராய் விதிகளும் அடங்கும். மேலும், UIDAI யின் இலவச சேவை செப்டம்பர் 14 முதல் நிறுத்தப்படுகிறது.

இந்த போலி ஆப்ஸ் செப்டம்பர் 1 முதல் நீக்கப்படும்

கூகுளின் புதிய Play Store பாலிசி செப்டம்பர் 1, 2024 முதல் அமலுக்கு வருகிறது. இன்று முதல் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து இதுபோன்ற ஆயிரக்கணக்கான போலி ஆப்கள் நீக்கப்படுவதாக கூகுள் தெரிவித்துள்ளது. அகற்றப்படும் ஆப்களின் தரம் குறைந்த ஆப்களும் அடங்கும். இந்த ஆப்கள் மேல்வேர் ஆதாரமாக இருக்கலாம். கூகுள் தரக் கட்டுப்பாடு மூலம் புதிய விதி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், உலகம் முழுவதும் உள்ள ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் மிகுந்த நிம்மதியைப் வழங்குகும் . இது Google இன் ப்ரைவசி மற்றும் ரகசியத்தன்மைக்கு சிறந்ததாக இருக்கும்.

how to check and report misuse of your aadhaar card online

செப்டம்பர் 14 வரை இலவச ஆதார் அப்டேட்

UIDAI ஆனது இலவச ஆதார் கார்டை அப்டேட் செய்வதற்க்கான காலக்கெடுவை செப்டம்பர் 14, 2024 வரை நீட்டித்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், மொபைல் பயனர்கள் தங்கள் 10 வருட ஆதார் கார்டை ஆன்லைனில் வீட்டில் உட்கார்ந்து அப்டேட் செய்ய முடியும். மை ஆதார் போர்ட்டலில் இருந்து இலவச ஆதார் அட்டையைப் புதுப்பிக்கும் வசதி கிடைக்கும். மொபைல் பயனர்கள் ஆதார் மையத்திற்குச் சென்று ஆதார் கார்டை அப்டேட் செய்யலாம் இதற்கு ரூ. 50 வசூலிக்கப்படுகிறது.

செப்டம்பர் 1 முதல் OTP மற்றும் மெசேஜ்களை பெறுவதில் தாமதம் ஏற்படலாம்

TRAI இன் புதிய விதிகளின்படி, செப்டம்பர் 1 முதல் ஒருவர் போலி அழைப்புகள் மற்றும் செய்திகளில் இருந்து விடுபடலாம். இருப்பினும், இது உங்கள் வங்கிச் செய்திகளையும் OTTயையும் பாதிக்கலாம். அதாவது இந்தச் செய்தியைப் பெறுவதில் தாமதம் ஏற்படலாம், இது ஆன்லைன் பேமெண்ட்கள் மற்றும் வங்கிப் பரிவர்த்தனைகளைப் பாதிக்கலாம். பதிவு செய்யப்படாத செய்திகள் மற்றும் அழைப்புகளை செப்டம்பர் 1 முதல் தடுக்குமாறு ஏர்டெல், வோடபோன்-ஐடியா, ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்களுக்கு TRAI உத்தரவிட்டுள்ளது. இது ஆன்லைன் கட்டணம், ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் ஆன்லைன் டெலிவரி ஆகியவற்றில் சிக்கல்களை ஏற்படுத்தலாம்.

TRAI new rules

இதையும் படிங்க :Jio யின் தினமும் 2GB டேட்டா உடன் வரும் 84 நாட்கள் வேலிடிட்டி உடன் வரும் மஜாவான பிளான்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :