digit zero1 awards

உலக கோப்பை கால்பந்து முன்னிட்டு Jio 5 புத்தம் புதிய பிளான் அறிமுகப்படுத்தியுள்ளது

உலக கோப்பை கால்பந்து முன்னிட்டு Jio 5 புத்தம் புதிய பிளான் அறிமுகப்படுத்தியுள்ளது
HIGHLIGHTS

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கால்பந்து ரசிகர்களை கவரும் வகையில் ஐந்து சர்வதேச ரோமிங் சலுகைகளை அறிவித்து இருக்கிறது.

நவம்பர் 20 ஆம் தேதி துவங்க இருக்கும்

உலக கோப்பை கால்பந்து போட்டிகளை காண கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியா பயணம் செய்ய இருக்கும்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கால்பந்து ரசிகர்களை கவரும் வகையில் ஐந்து சர்வதேச ரோமிங் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. கத்தாரில் நவம்பர் 20 ஆம் தேதி துவங்க இருக்கும் உலக கோப்பை கால்பந்து தொடரை முன்னிட்டு கத்தார் பயணம் செய்ய திட்டமிடுவோருக்கு இந்த சலுகைகள் பயனுள்ளதாக இருக்கும்.

உலக கோப்பை கால்பந்து போட்டிகளை காண கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியா பயணம் செய்ய இருக்கும் கால்பந்து ரசிகர்களுக்காக இந்த ரோமிங் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கத்தாரில் நடைபெற இருக்கும் போட்டிகளுக்கு ஏற்ப சிறந்த சலுகைகளை வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் தேர்வு செய்து கொள்ளலாம். புதிய சர்வதேச ரோமிங் சலுகைகளை வாடிக்கையாளர்கள் மைஜியோ செயலி அல்லது ஜியோ அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இருந்து வாங்கிடலாம்.

புதிய சர்வதேச ரோமிங் சலுகைகளின் விலை ரூ. 1,122 என துவங்குகிறது. ஜியோ ரூ. 1122 ரோமிங் சலுகை ஐந்து நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இதில் 1 ஜிபி டேட்டா கிடைக்கும். நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவு தீர்ந்ததும், டேட்டாவுக்கான கட்டணம் மாறிவிடும்.

ஜியோ ரூ. 3 ஆயிரத்து 999 ரோமிங் சலுகையில், 250 நிமிடங்களுக்கு உள்ளூர் அழைப்புகள், இந்தியாவுக்கான வாய்ஸ் கால், 250 நிமிடங்கள் இன்கமிங் அழைப்புகள், 3 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது. ஜியோ ரூ. 5 ஆயிரத்து 122 சலுகையில் 5 ஜிபி டேட்டா, 21 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது.

ஜியோ ரூ. 1599 சலுகை 15 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இதில் 150 நிமிடங்களுக்கு வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. இதில் உள்ளூர் அழைப்புகள், இந்தியாவுக்கான அழைப்புகள், இன்கமிங் அழைப்புகள் உள்ளிட்டவை அடங்கும். இத்துடன் 1 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. வைபை காலிங் நிறைவு பெற்றதும், அழைப்புகளுக்கான கட்டணம் ரூ. 1 ஆக மாறிவிடும்.

ரூ. 6 ஆயிரத்து 799 ஜியோ ரோமிங் சலுகையில் 500 நிமிடங்களுக்கு உள்ளூர் அழைப்புகள், இந்தியாவுக்கான அழைப்புகள், 500 நிமிடங்களுக்கு இன்கமிங் அழைப்புகள், 5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது. இவற்றில் நிர்ணயிக்கப்பட்ட வைபை காலிங் நிறைவு பெற்றதும், அழைப்புக்கான கட்டணம் ரூ. 1 ஆக மாறி விடும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo