ரிலையன்ஸ் ஜியோ அதிவேக 4G டவுன்லோடிங் ஸ்பீட் வழங்கி அசத்துகிறது.
இந்திய டெலிகாம் சந்தையில் மார்ச் 2019 இல் சராசரியாக 22.2Mbps வேகத்தில் இன்டர்நெட் வசதியை வழங்கி ரிலையன்ஸ் ஜியோ முதலிடம் பிடித்துள்ளது
இந்திய டெலிகாம் சந்தையில் மார்ச் 2019 இல் சராசரியாக 22.2Mbps வேகத்தில் இன்டர்நெட் வசதியை வழங்கி ரிலையன்ஸ் ஜியோ முதலிடம் பிடித்துள்ளது. மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டிருக்கும் புதிய அறிக்கையில் இந்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
பிப்ரவரி 2019 இல் ரிலையன்ஸ் ஜியோ 20.9Mbps வேகத்தில் இணைய வசதியை வழங்கியிருந்த நிலையில் மார்ச் மாதத்தில் இணைய வேகம் அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் 4ஜி வேகம் வழங்குவதில் ரிலையன்ஸ் ஜியோ தொடர்ந்து முன்னணி இடம் பிடித்து வருகிறது.
அந்த வகையில் மார்ச் மாதத்தில் ஜியோ வழங்கிய டேட்டா வேகம் பாரதி ஏர்டெல் நிறுவனத்தை விட இருமடங்கு அதிகமாகும். இத்துடன் 2018 ஆம் ஆண்டு முழுக்க வேகமான 4ஜி டவுன்லோடு வழங்கிய நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ இருந்தது.
பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் 4ஜி டவுன்லோடு வேகம் பிப்ரவரியில் 9.4Mbps ஆக இருந்தது. மார்ச் மாதத்தில் டேட்டா வேகம் 9.3Mbps ஆக இருந்தது என டிராய் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்பட்ட போதும், டிராய் இருநிறுவனங்களின் விவரங்களை தனியாகவே வெளியிட்டிருக்கிறது.
வோடபோனின் சராசரி 4ஜி டவுன்லோடு வேகம் மார்ச் மாதத்தில் 7Mbps ஆக இருந்தது. ஐடியா நிறுவனம் மார்ச் மாதத்தில் 5.6Mbps வேகம் வழங்கியிருக்கிறது. இருநிறுவனங்களும் பிப்ரவரி மாதத்தில் முறையே 6.8Mbps மற்றும் 5.7Mbps வேகம் வழங்கியிருக்கின்றன.
வோடபோன் நிறுவனம் 4ஜி அப்லோட்களில் முதலிடம் பிடித்திருக்கிறது. மார்ச் மாதத்தில் வோடபோன் அப்லோடு வேகம் 6Mbps ஆக இருந்தது. ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் அப்லோடு வேகம் முறையே 5.5Mbps மற்றும் 3.6Mbps ஆக இருந்தது. ஜியோவின் அப்லோடு வேகம் 4.6Mbps ஆக இருந்தது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile