புதிய விதிமுறை ஃபேஸ்புக் மெசஞ்சர் யின் புதிய அப்டேட்
ஃபேஸ்புக் நிறுவனம் தனது மெசஞ்சர் சேவையில் வாடிக்கையாளர்கள் மொபைல் நம்பர் கொண்டு சைன்-அப் செய்யும் வசதியினை சத்தமில்லாமல் நீக்கி இருக்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் இனி மெசஞ்சர் சேவையை பயன்படுத்த தங்களது ஃபேஸ்புக் அக்கவுண்ட்டினை பயன்படுத்த வேண்டியது அவசியம் ஆகியுள்ளது.
புதிய விதிமுறை ஃபேஸ்புக் மெசஞ்சர் மற்றும் மெசஞ்சர் லைட் சேவைகளுக்கும் பொருந்தும். புதிதாக மெசஞ்சர் சேவையை பயன்படுத்துவோர் இனி தங்களது ஃபேஸ்புக் அக்கவுண்ட் கொண்டு சைன் இன் செய்ய வேண்டி இருக்கும் ஃபேஸ்புக் நிறுவன செய்தி தொடர்பாளர் தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.
தற்சமயம் மெசஞ்சர் சேவையை ஃபேஸ்புக் அக்கவுண்ட் மூலம் சைன் இன் செய்தவர்களுக்கு எந்த மாற்றமும் ஏற்படாது. மேலும் அக்கவுண்ட் இல்லாமல் மெசஞ்சர் சேவையை பயன்படுத்துவோருக்கும் எந்த மாற்றமும் இருக்காது.
ஃபேஸ்புக்கின் முன்னணி மெசேஜ் சேவைகளான மெசஞ்சர், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றை ஒருங்கிணைக்கும் திட்டத்தின் கீழ் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
புதிய மாற்றம் காரணமாக சில வாடிக்கையாளர்கள் தங்களது ரெடிட் கணக்கில் மெசஞ்சர் சேவையை பயன்படுத்துவதற்கான வசதி நிராகரிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்து இருந்தனர். இவர்கள் செயலியில் ஏதேனும் பிழை அல்லது மாற்றம் செய்யப்பட்டு இருக்கலாம் என அவர்கள் பதிவிட்டு வருகின்றனர்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile