Excitel அறிமுகம் செய்தது 400Mbps ஸ்பீட் மற்றும் 17 OTT சப்ஸ்க்ரிப்சன் கொண்டிருக்கும்

Updated on 12-Jan-2024
HIGHLIGHTS

குறைந்த விலையில் அதிவேக இன்டர்நெட் வழங்குவதில் பெயர் பெற்றது Excitel

நிறுவனம் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது

இது குறைந்த விலை Southern OTT Pack இருக்கும்.

Excitel New Plan :குறைந்த விலையில் அதிவேக இன்டர்நெட் வழங்குவதில் பெயர் பெற்றது Excitel நிறுவனம் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் 400Mbps ஸ்பீட் மற்றும் 17 OTT கன்டென்ட் மிகக் குறைந்த விலையில் வழங்குகிறது. இது குறைந்த விலை Southern OTT Pack இருக்கும்.

ஒரு வருடத்திற்கு திட்டத்தை செயல்படுத்தினால், நீங்கள் மாதத்திற்கு ரூ.599 மட்டுமே செலுத்த வேண்டும். பெங்களூர், ஹைதராபாத், மங்களூரு, குண்டூர், விஜயவாடா போன்ற தென்னிந்திய நகரங்களுக்கு இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக Excitel தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தில் 300 க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களும் கிடைக்கின்றன.

Excitel Southern OTT Pack யின் விலை தகவல்.

Excitel Southern OTT Pack 3 ஒப்சன்களில் வருகிறது., அதன் 12 மாத சப்ச்க்ரிப்சனில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் 599 ரூபாய் செலுத்த வேண்டும். 6 மாதங்களுக்கு திட்டத்தை செயல்படுத்தினால், மாதத்திற்கு ரூ.677 செலவாகும். நீங்கள் 3 மாத திட்டத்தை எடுத்துக் கொண்டால், அதன் விலை மாதத்திற்கு ரூ.847 ஆகும்.

Excitel Southern OTT Pack யின் நன்மைகள்

Excitel Southern OTT Pack யில் 400Mbps வரையிலான ஸ்பீட் வழங்குகிறது, மேலும் இதில் 17 OTT பிளாட்பார்மில் கன்டென்ட் அக்சஸ் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றும் இதில் 300 அதிகமான லைவ் டிவி சேனல்கள் பார்க்க முடியும்.

இந்த OTT பிளாட்பார்மில் எக்ஸ்ப்லோர் செய்ய முடியும்

Excitel Southern OTT Pack உடன் Disney Plus Hotstar, Zee5, Sony Liv, Sun Next, Aaha, Raj Digital, iStream போன்ற தளங்களில் இருந்து கண்டேண்டை பார்க்க முடியும்.

இதையும் படிங்க: Honor Magic 6 மற்றும் Magic 6 Pro அறிமுகம், இதன் டாப் அம்சங்கள் தெருஞ்சிகொங்க

அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்த Excitel CEO வருண் பாஸ்ரிச்சா, வீட்டு என்டர்டைமென்ட் மறுவரையறை செய்வதில் நாங்கள் முன்னணியில் உள்ளோம் என்றார். இந்தியாவின் முதல் தெற்குத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு இது தயார் செய்யப்பட்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :