ஐடியாவின் ரூபாய்.198/- ரீசார்ஜில்: இனி கூடுதல் டேட்டா வழங்கும்.!
4G/3G டேட்டாவோடு சேர்த்து, இந்த ஐடியா திட்டமானது எந்தவொரு நெட்வொர்க்கிலும் உள்ள லோக்கல் மற்றும் STD நம்பர்களுக்கு 'அன்லிமிட்டட் பிரீ கால் ' நன்மையையும் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS நன்மையையும் வழங்குகிறது.
ஜியோவுடன் போட்டியிடும் வகையில், தனது கஸ்டமர்களை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கத்திடனும், ஐடியா நிறுவனம் மற்றொரு நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன் ரூபாய்198/- என்கிற ரீசார்ஜ் திட்டத்தில் திருத்தங்களை கொன்டு வந்துள்ளது .
தற்போது இந்த திட்டத்தின் கீழ் கூடுதல் டேட்டாவை – கட்டணம் ஏதும் வசூலிக்காமல் தனது கஸ்டமர்களுக்கு வழங்க ஐடியா திட்டமிட்டுள்ளது. குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் வட்டாரங்களில் மட்டுமே இந்த திட்டங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்ட இந்த திட்டம், 1GB அளவிலான தொகுக்கப்பட்ட தரவு நன்மையை வழங்கியது. இந்த வரம்பு இப்போது 1.5GB என்று மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் வழங்கும் 1.5 GB அளவிலான டேட்டா மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும், ஒரு நாளைக்கு அல்ல என்பதை மனதிற்கொள்ள வேண்டும்.
ஐடியா வெப்சைட் அல்லது மைஐடியா பயன்பாட்டிலிருந்து இந்த ரீசார்ஜ் திட்டத்தை வாங்குவோர் நிறுவனத்திடமிருந்து 1GB கூடுதல் டேட்டா கிடைக்கும். ஆகமொத்தம் 2.5GB அளவிலான தொகுக்கப்பட்ட டேட்டாவை இந்த திட்டம் வழங்குகிறது.
4G/3G டேட்டாவோடு சேர்த்து, இந்த ஐடியா திட்டமானது எந்தவொரு நெட்வொர்க்கிலும் உள்ள லோக்கல் மற்றும் STD நம்பர்களுக்கு 'அன்லிமிட்டட் பிரீ கால் ' நன்மையையும் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS நன்மையையும் வழங்குகிறது.
இந்த லிம்மிட்டை தாண்டி அவர்கள் சென்றால், வினாடிக்கு 1 பைசா என்கிற விகிதத்தில் கட்டணம் வசூலிக்கப்படும். இதேபோல், 2.5GB என்கிற டேட்டா லிமிட்டை மீறிய பின்னர் 1கேபி டேட்டாவிற்கு 4 பைசா கட்டணம் வசூலிக்கப்படும்.
முகேஷ் அம்பானி தலைமையிலான, ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ.199/- திட்டமானது மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் நாள் ஒன்றிற்கு 1GB என மொத்தம் 28 ஜிபி அளவிலான அதிவேக டேட்டாவை வழங்குகிறது. உடன் அன்லிமிடட் கால்ஸ், இலவச SMS மற்றும் ஜியோ பயன்பாடுகள் ஆகிய பிளான்களை வழங்குகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile