ரிலையன்ஸ் ஜியோ வின் இருமடங்கு டேட்டா அதிரடி ஜாக்போட் ஆபர்
இருமடங்கு டேட்டா தவிர ஜியோ அல்லாத மற்ற நெட்வொர்க் எண்களுக்கு மேற்கொள்ளப்படும் அழைப்புகளுக்கான நிமிடங்களும் இருமடங்காக நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஃபைபர் டு ஹோம் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு இருமடங்கு டேட்டா வழங்குவதாக அறிவித்து உள்ளது.
இதனை ரிலையன்ஸ் ஜியோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் தெரிவித்து இருக்கிறது. ரிலைன்ஸ் ஜியோ அறிவிப்பின் படி ஜியோ ஃபைபர் சேவையை பயன்படுத்தும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இருமடங்கு டேட்டா வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோவின் இருமடங்கு டேட்டா சலுகையை பெற வாடிக்கையாளர்கள் மைஜியோ செயலியின் மை வவுச்சர்ஸ் பகுதியை க்ளிக் செய்ய வேண்டும். நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில தினங்களில் ஜியோவின் இருமடங்கு டேட்டா சலுகைக்கான அறிவுப்பு வெளியாகி இருக்கிறது.
ஜியோ ஆட் ஆன் சலுகைகளின் விலை ரூ. 11, ரூ. 21, ரூ. 51 மற்றும் ரூ. 101 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் தற்சமயம் இருமடங்கு டேட்டா வழங்கப்படுகிறது. இருமடங்கு டேட்டா தவிர ஜியோ அல்லாத மற்ற நெட்வொர்க் எண்களுக்கு மேற்கொள்ளப்படும் அழைப்புகளுக்கான நிமிடங்களும் இருமடங்காக நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.
நாட்டில் பெரும்பாலானோர் வீட்டில் இருந்து பணியாற்றி வருவதால் டேட்டா பயன்பாடு கணிசமான அளவு அதிகரிக்கும். முன்னதாக ஜியோ பிரீபெயிட் சலுகையின் பலன்களை மாற்றியமைத்து ஒவ்வொரு சலுகையிலும் இருமடங்கு டேட்டா வழங்குவதாக அறிவித்து இருந்தது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile