இந்திய டெலிகாம் சந்தையில் தனியார் நிறுவனங்களுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் பிஎஸ்என்எல் தனது சலுகை பலன்களை மாற்றியமைத்து வருகிறது. அந்த வரிசையில், தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 71, ரூ. 104, ரூ. 135 மற்றும் ரூ. 395 விலை சலுகைகளை நீக்கி இருக்கிறது. அதிக பிரபலமாக இல்லாதது மற்றும் எதிர்பார்த்த பலன் கிடைக்காத காரணத்தால் நான்கு சலுகைகளும் நீக்கப்பட்டுள்ளன.
BSNL புதிய ரூ. 269 மற்றும் ரூ. 769 சலுகைகள் ஃபெஸ்டிவல் தமாகா ஆஃபரின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பிஎஸ்என்எல் ரூ. 269 சலுகையில் அன்லிமிடெட் காலிங், தினமும் 2 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ், பிஎஸ்என்எல் டியூன்ஸ், சிங் ஆப் சந்தா, இரோஸ் நௌ சந்தா மற்றும் பல்வேறு பலன்கள் வழங்கப்படுகின்றன.
பிஎஸ்என்எல் ரூ. 769 சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா, பிஎஸ்என்எல் டியூன்ஸ், தினமும் 100 எஸ்எம்எஸ், லாக்துன் செயலிக்கான சந்தா, சிங் ஆப் சந்தா, இரோஸ் நௌ சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இந்த சலகையின் வேலிடிட்டு 90 நாட்கள் ஆகும்.
நீக்கப்பட்ட சலுகைகளுக்கு மாற்றாக புதிய திட்டங்களை விரைவில் பிஎஸ்என்எல் அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம். பிஎஸ்என்எல் நிறுவனம் இந்திய சந்தையில் 4ஜி சேவையை இந்த ஆண்டும், 5ஜி சேவையை அடுத்த ஆண்டும் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. புதிய நெட்வொர்க் அறிமுகம் செய்யப்படும் போது இவ்வாறு செய்வது சிறப்பானதாக இருக்கும்.