BSNL வருடத்திர பிளான் ரூ,2,999 யில் கிடைக்கும் Extra Validity மற்றும் பல சூப்பர் நன்மைகள்

Updated on 12-Dec-2023
HIGHLIGHTS

BSNL கூடுதல் வேலிடிட்டி நன்மையை வழங்கப்படுகிறது, இது வருடாந்திர பிளான் வவுச்சர் ஆகும்

இந்த திட்டத்தின் பெயர் BSNL PV Rs 2,999 ஆகும்

இப்போது ரூ.2,999 நீண்ட கால திட்டத்தில் கூடுதல் வேலிடிட்டியை வழங்குவதாகக் கூறியது.

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்(BSNL) கூடுதல் வேலிடிட்டி நன்மையை வழங்கப்படுகிறது, இது வருடாந்திர பிளான் வவுச்சர் ஆகும் இது ரூ,2,999க்கு வருகிறது. BSNL பல சிறந்த திட்டங்களை கொண்டுள்ளது. இந்த ஆண்டு முடிவதற்குள், BSNL தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு அற்புதமான சலுகையை வழங்கியுள்ளது. நிறுவனம் ஒரு புதிய நீண்ட கால திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாத கூடுதல் வேலிடிட்டியை வழங்குகிறது.

அதாவது ஒவ்வொரு பண்டிகை காலங்களிலும் BSNL அதன் வேலிடிட்டியை அதிகரிப்பது வழக்கம் அந்த வகையில் இப்போது 2023 முடிவுக்கு வரும் நேரம் நெருங்கிவிட்டது நிறுவனம் பயனர்களுக்கு கூடுதல் வேலிடிட்டி இந்த புதிய சலுகை குறித்த தகவலை அந்நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் பெயர் BSNL PV Rs 2,999 ஆகும் இந்த திட்டத்தில் என்ன நன்மை கிடைக்கும் என்பதை பற்றி தெளிவாக பார்க்கலாம்

BSNL PV Rs 2,999 திட்டத்தின் நன்மை

X யில் பதிவிட்டு, நிறுவனம் இப்போது ரூ.2,999 நீண்ட கால திட்டத்தில் கூடுதல் வேலிடிட்டியை வழங்குவதாகக் கூறியது. இந்தத் திட்டத்தை நீங்கள் எடுக்க விரும்பினால், இது ஒரு குறிப்பிட்ட கால சலுகை என்று சொல்லலாம் அதாவது .March 1, 2024 தேதிக்குள் உங்கள் பிஎஸ்என்எல் நம்பரை ரூ.2,999க்கு ரீசார்ஜ் செய்தால், இந்தச் சலுகையைப் பெற முடியும். இந்த திட்டத்தில், பயனர்களுக்கு 30 நாட்கள் கூடுதல் வேலிடிட்டியை பெறலாம்.

BSNL யின் இந்த திட்டத்தின் நன்மைகளைப் பற்றி நாம் பேசினால், இந்த திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டியாகும் தற்போது அந்த நிறுவனம் புதிய சலுகையை சேர்த்துள்ளது, இப்போது (365 + 30).= 395 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். அதாவது இதில் கூடுதல்க 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இதை தவிர இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங், லோக்கல் STD மற்றும் ரோமிங் கால்களும் வல்குகிறது மேலும் இதில் தினமும் 3GB ஹை ஸ்பீட் டேட்டா வழங்கப்படுகிறது இதன் லிமிட் முடிவடைந்தால் 40 Kbps ஸ்பீடை குறைக்கப்படுகிறது.இதை தவிர இதில் தினமும் 100 SMS வழங்கப்படுகிறது. MTNL பகுதிகள் மும்பை மற்றும் டெல்லி உட்பட, இடங்களுக்கும் பொருந்தும்.

இதையும் படிங்க: Aadhaar card Update: இலவச அப்டேட் இன்னும் 2 நாட்களில் முடிகிறது

BSNL கூடுதல் வேலிடிட்டி நன்மையை பெற இந்த நீங்கள் இப்போது மார்ச் 1, 2024க்குள் ரீச்சார்ஜ் செய்ய வேண்டும்., பிஎஸ்என்எல் செல்ஃப் கேர் ஆப் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ரீசார்ஜ்களில் கூடுதல் டேட்டா பலன்களை பிஎஸ்என்எல் வழங்குகிறது. அது மட்டுமின்றி, பிஎஸ்என்எல் செல்ஃப் கேர் ஆப் மூலம் தங்கள் நம்பர்களை ரீசார்ஜ் செய்யும் பிஎஸ்என்எல் பயனர்களுக்கு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் வவுச்சர்களில் தள்ளுபடியும் உள்ளது. நன்மையின் கீழ் தகுதியான திட்டங்களைப் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு, மேலே உள்ள இணைக்கப்பட்ட செய்தியைப் பார்க்கவும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :