BSNL போலவே இருக்கும் இந்த போலியான வெப்சைட் எச்சரிக்கை மக்களே ஒரே கிளிக்கில் பணம் அபேஸ் ஆகலாம்

Updated on 10-Jan-2025

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) ஒரு பிராட் வெப்சைட்டை பற்றி எச்சரிக்கை கொடுத்துள்ளது, இந்த வெப்சைட் மூலம் பொய்யான தகவலை பரப்புவதாக கூறியுள்ளது, பிஎஸ்என்எல் இணையதளம் போலியானது என்று தெளிவுபடுத்தியது மற்றும் ஆன்லைனில் தொடர்பு கொள்ளும்போது பயனர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. பயனர்கள் சரிபார்க்கப்படாத லின்க்களை கிளிக் செய்வதைத் தவிர்க்கவும், தனிப்பட்ட அல்லது நிதி விவரங்களைப் பகிரும் முன் வெப்சைட் நம்பகத்தன்மையை எப்போதும் சரிபார்க்கவும்.

BSNL சில நாட்களுக்கு முன் அதன் அதன் திட்டத்தின் விலையில் வேலிடிட்டி 425 நாட்கள் வரை அதிகரித்துள்ளது மேலும் இந்தியாவில் இது போன்ற திட்டத்தின் நன்மையை வேறு எந்த திட்டமும் 425 நாட்கள் வேலிடிட்டி நன்மை கிடைக்காது.

BSNL யின் போலி வெப்சைட் குறித்து எச்சரிக்கை

BSNL யின் X யின் ஒரு போஸ்ட்டின் மூலம் பொது மக்களுக்கு ஒரு எச்சரிக்கை கொடுத்துள்ளது. ரு இணையதளம் பிஎஸ்என்எல்-ஐ பின்பற்றுவதாகவும், இது மோசடியுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. BSNL இன் அதிகாரப்பூர்வ கணக்கிலிருந்து இந்த ட்வீட்டில், நிறுவனம் https://bsnl5gtower.com என்ற வெப்சைட் போலியானது என்றும் மாநில அரசின் கீழ் உள்ள டெலிகாம் ஆபரேட்டருடன் தொடர்புடையது அல்ல என்றும் தெரிவித்துள்ளது.

BSNL யின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த வெப்சைட் ஒரு போலியானது மற்றும் BSNL உடையது அல்ல எனவே நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள் என கூறியுள்ளது, அதாவது இதில் BSNL உடையது அல்ல மேலும் நீங்கள் உங்களின் எதிர்பாராத மோசடியில் இருந்து தவிர்க்க உங்களின் டேட்டாவை எதையும் ஷேர் செய்ய வேண்டாம், எந்த ஒரு தகவலை பற்றி தெரிந்து கொள்ள அதன் அதிகாரபூர்வ வெப்சைட் செல்ல வேண்டும்.

இத்தகைய மோசடியின் வெப்சைட் நோக்கம் பார்க்க அதிகார்போவ வெப்சைட் போல காப்பி செய்து மக்களை ஏமாற்றி ஒரு வகை மோசடியே ஆகும் மக்கள் இது உண்மையான வெப்சைட் என நம்பி அவர்களின் டேட்டாவை ஷேர் செய்வதன் மூலம் மக்களின் பணத்தை மோசடி செய்யலாம்.

இதையும் படிங்க:Jio VS BSNL: இந்த 199 யில் வரும் இந்த திட்டத்தில் ஜியோவை துவம்சம் செய்த பிஎஸ்என்எல்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :