மக்களே BSNL யில் நெட்வொர்க் பிரச்சினையே இனி இல்லை 2G/3G லிருந்து உடனே 4Gக்கு அப்க்ரேட் செய்யலாம்

மக்களே BSNL யில் நெட்வொர்க் பிரச்சினையே இனி இல்லை 2G/3G லிருந்து உடனே 4Gக்கு அப்க்ரேட் செய்யலாம்

அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL தனது 4ஜி சேவையை விரிவுபடுத்துவதில் வேகமாக செயல்பட்டு வருகிறது. BSNL மே 2023 யில் நாடு முழுவதும் 4G சேவையை வெளியிடத் தொடங்கியது. அதே நேரத்தில், சில காலத்திற்கு முன்பு, இந்திய மொபைல் காங்கிரஸில், பிஎஸ்என்எல் தலைவர் பிகே பூர்வார் டிசம்பர் மாதத்தில் 4 ஜி சேவை தொடங்கப்படும் என்றும், ஜூன் 2024 க்குள் நாடு முழுவதும் இது அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறினார். இதைப் பார்த்த அந்நிறுவனம் தனது பயனர்களுக்கு 4ஜி சிம்மிற்கு இலவசமாக அப்கிரேட் செய்துகொள்ளும் வாய்ப்பை வழங்கி வருகிறது.

BSNL யின் 4G சிம் அப்க்ரெட் ஆபர்

உண்மையில், 4G அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே, நிறுவனம் ஒரு அற்புதமான சலுகையைக் கொண்டு வந்துள்ளது. பிஎஸ்என்எல் பயனர்கள் தங்களது பழைய 2ஜி அல்லது 3ஜி சிம்மை 4ஜி சிம்மிற்கு இலவசமாக மேம்படுத்திக்கொள்ளலாம் என்று பிஎஸ்என்எல் இந்தியா X யின் ஒரு போஸ்ட்டில் தகவல் கொடுத்துள்ளது. சிம்மை மேம்படுத்த, பயனர்கள் தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையத்திற்குச் செல்ல வேண்டும். இதற்காக கஸ்டமர்களிடமிருந்து இருந்து எந்தவிதமான பணமும் எடுக்கப்படாது.

BSNL சிம்மில் இந்த புதிய சேவை எப்படி ஆரம்பமாகும்?

நீங்கள் BSNL இன் புதிய bsnl VoLTE சேவையைத் தொடங்க விரும்பினால், உங்கள் BSNL 4G அல்லது BSNL 5G சிம்மில் இருந்து ஒரே ஒரு மெசேஜை மட்டும் அனுப்ப வேண்டும், இந்தச் மெசேஜுக்கு பிறகு, நீங்கள் பெறக்கூடிய வழிமுறைகளைப் பின்பற்றவும் போனில் 4G மற்றும் BSNL 5G சிம்மில் VoLTE சேவை.

  • உங்களின் BSNL 4G அல்லது 5G SIM லிருந்து ACTVOLTE மெசேஜ் எழுதி நீங்கள் இதை 53733யில் அனுப்பலாம்.
  • இதற்குப் பிறகு, பெறப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றவும்.
  • இதைச் செய்வதன் மூலம் BSNL VoLTE சேவையைப் பயன்படுத்தி உங்கள் Wi-Fi மூலம் எளிதாக கால்களை செய்யலாம்.

இலவச 4G சிம் எப்படி பெறுவது?

நிறுவனம் தனது 4ஜி சேவைகளை அதிகரிக்கவே இந்த சலுகையை வழங்குவதாக தெரிகிறது. நாங்கள் உங்களுக்குச் சொன்னது போல், இந்தச் சலுகையின் பலனைப் பெற, BSNL கஸ்டமர் கேர் மையத்தைத் தவிர, நீங்கள் உரிமையாளரை அல்லது ரீடைளர் விற்பனையாளர் கடை அதிகாரியைத் தொடர்பு கொள்ளலாம்.

இதனுடன் நீங்கள் 1503/18001801503 என்ற எண்ணிலும் அழைக்கலாம். இருப்பினும், இதனுடன் சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் உள்ளன, மேம்படுத்தும் நேரத்தில் அவை பற்றிய தகவல்கள் உங்களுக்கு வழங்கப்படும்.

இதையும் படிங்க:BSNL யின் வெறும் ரூ,100 யில் தினமும் 2GB டேட்டா உடன் வரும் சூப்பர் திட்டம் வேலிடிட்டியும் அதிகம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo