பிஎஸ்என்எல் நிறுவன சேவையில் கடந்த மார்ச் மாதம் மட்டும் சுமார் 40 லட்சம் பேர் இணைந்திருப்பதாக பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. இதே மாதத்தில் மொபைல் நம்பர் போர்டபிலிட்டி சேவையின் கீழ் மட்டும் சுமார் 12 லட்சம் பேர் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சலுகைகள் மற்றும் கூடுதல் சேவைகளின் மூலம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. நெட்வொர்க் சேவை மேம்படுத்தப்பட்டு இருப்பதோடு தற்போதைய டெலிகாம் சூழலுக்கு ஏற்ப கவர்ச்சிகர சலுகைகள் தொடர்ந்து அறிவிக்கப்படுவதும் புதிய வாடிக்கையாளர்கள் இணைய முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலவையில், எதி்காலத்தில் சேவையை வழங்குவதில் பெரிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. மேலும் நெட்வொர்க் பரப்பளவை அதிகரிக்கவும், வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என பிஎஸ்என்எல் தலைவர் ஆர்.கே. மிட்டல் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஏர்செல் சேவை முடங்கியதால் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் BSNL சேவையில் இணைந்தனர். இந்த ஆண்டு துவக்கம் முதலே பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு ஏர்செல் நிறுவனமும் காரணமாக கூற முடியும்.