BSNL யின் டேட்டா, சர்வர் மூலம் தகவல் லீக்

BSNL யின் டேட்டா, சர்வர் மூலம் தகவல் லீக்
HIGHLIGHTS

அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

ஹேக்கர்கள் பயனர்கள் மற்றும் பிஸ்னஸ் டேட்டாவை பெற்றதாகக் கூறப்படுகிறது.

ஹேக்கர்கள் பயனர்கள் மற்றும் பிஸ்னஸ் டேட்டாவை பெற்றதாகக் கூறப்படுகிறது.

அரசு டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அதன் சேவையகங்களை தாக்குவதன் மூலம், ஹேக்கர்கள் பயனர்கள் மற்றும் பிஸ்னஸ் டேட்டாவை பெற்றதாகக் கூறப்படுகிறது. ஹேக்கர்கள் தங்களிடம் சிம் கார்டு விவரங்கள், வீட்டு லோகேசன் ரெக்கார்டிங் டேட்டா மற்றும் சேவை தொடர்பான முக்கியமான பாதுகாப்பு விசைகள் இருப்பதாகக் கூறுகின்றனர். திருடப்பட்ட டேட்டா சிம் கார்டு குளோனிங், அடையாள திருட்டு மற்றும் மிரட்டி பணம் பறித்தல் போன்றவற்றுக்கும் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சம் உள்ளது.

BSNL டேட்டா லீக்

ஒரு மீடியா ரிப்போர்டின் படி டிஜிட்டல் ரிஸ்க் மேனேஜ்மென்ட் போர்ம் Athenian Tech யின் மேற்கோள் காட்டப்பட்டது. இந்த சைபர் அட்டேக் பின்னே kiberphant0m ஹேக்கர் என்று அழைக்கப்படுபவர் இது ஹேக்கரின் டார்க் வெப் ஃபோரம் பயனர்பெயராக இருக்கலாம். எனினும், இந்த ஹேக் தனிப்பட்ட நபரா அல்லது ஹேக்கர்கள் குழுவால் செய்யப்பட்டதா என்பது உறுதி செய்யப்படவில்லை. பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு வணிகத்தில் இருந்து சுமார் 278 ஜிபி டேட்டா திருடப்பட்டுள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது. மீண்டும் மீண்டும் தாக்குதல்கள் மற்றும் பாதுகாப்பு அபாயங்களுக்குப் பயன்படுத்தக்கூடிய சர்வரின் ஸ்னாப்ஷாட்களும் இதில் அடங்கும். இந்த சைபர் தாக்குதலில், சர்வதேச மொபைல் சந்தாதாரர் அடையாள (IMSI) நம்பர்கள் சிம் கார்டு விவரங்கள், பின் கோட் அதேடிகேசன் சாவிகள் மற்றும் பிற முக்கிய தகவல்கள் திருடப்பட்டுள்ளன.

இந்த ரிப்போர்ட்டின் படி திருடப்பட்ட டேட்டாக்களை விற்க ஹேக்கர் முன்வந்துள்ளார். கடந்த நிதியாண்டில் BSNL யின் நிகர இழப்பு ரூ.5,367 கோடியாக குறைந்துள்ளது. முந்தைய நிதியாண்டில் இந்நிறுவனத்தின் நிகர இழப்பு ரூ.8,161 கோடியாக இருந்தது. செலவினங்களைக் குறைப்பதும், இயங்காத வருமானம் அதிகரிப்பதும்தான் அதன் நஷ்டம் குறைவதற்கு முக்கியக் காரணம்.

BSNL யின் ஒப்பரேசனில் வருவாய் சிறிதளவு அதிகரித்து ரூ.19,343.6 கோடியாக இருந்தது. ஆனால், மத்திய அரசு நிர்ணயித்த இலக்கான ரூ.20,000 கோடியை விட குறைவாகவே உள்ளது. கடந்த நிதியாண்டில் செல்லுலார் சேவைகள் மற்றும் நிறுவனப் பிரிவுகளின் மூலம் நிறுவனத்தின் வருவாய் குறைந்துள்ளது.

இதன் செலவுகள் சுமார் 2.5 சதவீதம் குறைந்து ரூ.26,683 கோடியாக உள்ளது. இருப்பினும், நிறுவனத்தின் ஊழியர்களின் செலவு 4.4 சதவீதம் அதிகரித்து ரூ.8,034 கோடியாக உள்ளது. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் இருந்து பிஎஸ்என்எல் நிறுவனம் கடும் போட்டியை சந்தித்து வருகிறது. அதன் 4ஜி சேவையை அறிமுகப்படுத்துகிறது. பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ போன்ற பெரிய தனியார் டெலிகாம் நிறுவனங்கள் நாடு முழுவதும் தங்கள் 5ஜி நெட்வொர்க்குகளை தொடங்கியுள்ளன. இதன் காரணமாக இந்நிறுவனங்களின் சந்தாதாரர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: Vodafone Idea யின் இந்த திட்டத்தில் 30GB Extra Data கிடைக்கும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo