ஜியோவுக்கு போட்டியாக குறைந்த விலையில் BSNL சலுகை அறிவிப்பு
ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக குறைந்த விலையில் புதிய சலுகைகளை பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.
BSNL நிறுவன பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது.
பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய சலுகைகளின் துவக்க விலை ரூ.118 ஆகும். இந்த சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் (மும்பை மற்றும் டெல்லியில் ரோமிங் கிடையாது) 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் தமிழக வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக ரிங்-பேக் டோன் வழங்கப்படுகிறது.
புதிய ரூ.118 சலுகை ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.98 சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது. ஜியோ வழங்கும் ரூ.98 சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு 2ஜிபி 4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 300 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதி 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து பிஎஸ்என்எல் ரூ.379 விலையில் சலுகையை அறிவித்துள்ளது. இதில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 4 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா, பிஎஸ்என்எல் எண்களுக்கு அன்லிமிட்டெட் அழைப்புகள் 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகை தற்சமயம் கேரளா வட்டாரத்தில் மட்டும் வழங்கப்படுகிறது.
இந்த சலுகை ஜியோவின் ரூ.349 மற்றும் ரூ.399 சலுகைகளுக்கு போட்டியாக அமைந்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ ரூ.349 மற்றும் ரூ.399 சலுகைகளில் வாடிககைாயளர்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் முறையே 70 நாட்கள் மற்றும் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது.
பிஎஸ்என்எல் ரூ.551 சலுகையும் கேரளா வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா, பிரத்யேக ரிங்-பேக் டோன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. அழைப்புகளில் எவ்வித சலுகையும் அறிவிக்கப்படவில்லை.
ரூ.444 விலையில் அறிவிக்கப்பட்டுள்ள பிஎஸ்என்எல் சலுகையில் அதே அளவு டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், பிரத்யேக ரிங்-பேக் டோன் உள்ளிட்டவை 60 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. பிஎஸ்என்எல் அல்லாத மற்ற எண்களுக்கு மேற்கொள்ளப்படும் வாய்ஸ் கால் நிமிடங்கள் நாள் ஒன்றிற்கு 200 நிமிடங்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கேரளா வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ரூ.666 சலுகை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1 ஜிபி 4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 129 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
இறுதியில் ரூ.485 விலையில் அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 90 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile