BSNL யின் 5G சேவை அடுத்த ஆண்டு கொண்டுவரப்படும்

Updated on 26-Aug-2024
HIGHLIGHTS

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) அதன் 5G சேவையை அடுத்த ஆண்டு அதவது 2025 சங்கராந்தி யில் அறிமுகம்

செய்தியாளர் சந்திப்பில் பேசிய தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது

பிஎஸ்என்எல் இதுவரை 25,000 தளங்களை உருவாக்கியுள்ளது

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) அதன் 5G சேவையை அடுத்த ஆண்டு அதவது 2025 சங்கராந்தி யில் அறிமுகம் செய்யும் என கூறப்பட்டுள்ளது இதனை ஆந்திர மாநில BSNL முதன்மை பொது மேலாளர் எல் ஸ்ரீனு உறுதி செய்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது BSNL டவர் மற்றும் பிற உபகரணங்களை மேம்படுத்தி வருகிறது என்பதை ஸ்ரீனு உறுதிப்படுத்தினார். TCS (டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்) இலிருந்து பிஎஸ்என்எல் எடுக்கும் 4ஜி ஸ்டாக் 5ஜிக்கு மேம்படுத்தக்கூடியது. எனவே, பிஎஸ்என்எல் இந்தியாவில் 5ஜியை வெளியிடுவதற்கு இது பெரிய கேபெக்ஸ் அவுட்கோவை ஏற்படுத்தாது.

அரசு நடத்தி வரும் டெலிகாம் ஒப்பரேட்டார் ஏற்கனவே 4ஜியை அறிமுகப்படுத்திய பகுதிகளில் கஸ்டமர்களுக்கு 5G NSA (non-standalone) சேவை செய்யும் தற்பொழுது 4G அறிமுகப்படுத்துவதர்க்கான வேலை நடைபெற்றி வருகிறது

டெலிகாம் நிறுவனத்தின் நோக்கம் 2024-25 நிதியாண்டின் இறுதிக்குள் 1 லட்சம் தளங்களை வெளியிடும் என்று கூறப்பட்டுள்ளது பிஎஸ்என்எல் இதுவரை 25,000 தளங்களை உருவாக்கியுள்ளது, மேலும் பல தளங்களை வெளியிடுவதற்கான முன்னேற்றத்தில் உள்ளது. 5G வெளியீடும் வெவ்வேறு கட்டங்களில் நடக்கும், மேலும் 5G ஐப் பொறுத்தவரை BSNL தனியார் டெலிகாம் ஆபரேட்டர்களுடன் போட்டியிடுவது கடினமாக இருக்கலாம்

இதனுடன் BSNL மற்றொரு புதிய ப்ரொஜெக்டில் வேலை செய்வதாகவும் அதன் பெயர் ‘Sarvathra Wi-Fi ப்ரொஜெக்ட் கீழ் இயங்கும் ஸ்ரீனு உறுதியளித்தார் இந்தத் திட்டத்தின் கீழ், கஸ்டமர்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லும்போதும் வைஃபை சேவையைத் தொடர்வதே BSNL யின் இலக்காகும். இது அடிப்படையில் இடமாற்றம் செய்யும் போது சேவைகளின் தொடர்ச்சியாகும். BSNL அதன் ஃபைபர் சேவைகளுடன் PAN-இந்தியாவில் முன்னிலையில் இருப்பதால், BSNL க்கு இதை செயல்படுத்துவது இன்னும் எளிதாகிவிட்டது. இது இந்தியாவில் உள்ள தனியார் டெலிகாம் ஆபரேட்டர்கள் ஏற்கனவே வழங்கும் ஒரு வகையான சேவையாகும்.

BSNL 4G நெட்வொர்க்குகளை அறிமுகப்படுத்துவதற்காக கஸ்டமர்களுக்கு காத்திருக்கும் நிலையில், டெலிகாம் ஆபரேட்டரின் நிர்வாகிகள் 5G வெளியீட்டை உறுதி செய்துள்ளனர், இது 2025 ஜனவரி முதல் பாதியில் சங்கராந்தியை கருத்தில் கொண்டு வரப்படும் என கூறப்பட்டது அதாவது இதன் அர்த்தம் மிக விரைவாகவே 5G சேவையும் கிடைக்க போவதாக அர்த்தம் ஆகும்.

நாடு முழுவதும் 4G சேவை அனைவருக்கும் கிடைக்கும்.

அக்டோபர் 15, 2024க்குள் பிஎஸ்என்எல் நாட்டில் 4ஜி சேவையைத் தொடங்கலாம் என்று நம்பப்படுகிறது. இதற்காக மொபைல் டவர்களை வேகமாக இன்ஸ்டால் செய்யும் பணியை அந்நிறுவனம் தொடங்கியுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நாடு முழுவதும் 4ஜி சேவை கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. BSNL மொபைல் காலிங் மெசேஜ் மற்றும் இன்டர்நெட் சேவைகளை மிகவும் குறைந்த விலையில் வழங்க முடியும் என்பது அறியப்படுகிறது.

இதையும் படிங்க: BSNL யின் மஜாவான பிளான் ஜியோவுக்கு டஃப் கொடுக்க 395 நாட்கள் வேலிடிட்டி

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :