BSNL 5G யின் வெளியீட்டை அதிரடியாக அறிவித்த டெலிகாம் மந்திரி அதிரடி.
அக்டோபர் மாதம் முதல் நாட்டில் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவை நாட்டின் முக்கிய நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளன
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனமும் விரைவில் 5ஜி சேவையைத் தொடங்க உள்ளது
அக்டோபர் மாதம் முதல் நாட்டில் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவை நாட்டின் முக்கிய நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளன. இப்போது பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனமும் விரைவில் 5ஜி சேவையைத் தொடங்க உள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனமும் விரைவில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்த உள்ளதாக மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இருப்பினும், மேம்படுத்த குறைந்தபட்சம் 5 முதல் 7 மாதங்கள் ஆகலாம்.
நாடு முழுக்க பிஎஸ்என்எல் வைத்திருக்கும் 1 லட்சத்து 35 ஆயிரம் டெலிகாம் டவர்களிலும் இதே போன்ற அப்கிரேடு செய்யப்பட இருப்பதாக மத்திய டெலிகாம் மற்றும் ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்து இருக்கிறார்.
தற்போது கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் நோக்கில் டெலிகாம் துறை வளர்ச்சி நிதியை ஆண்டிற்கு ரூ. 500 கோடியில் இருந்து ரூ. 4 ஆயிரம் கோடியாக உயரத்த அரசு திட்டமிட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்து இருக்கிறார். கோடக் வங்கி தலைமை செயல் அதிகாரி உதய் கோடக், இந்திய டெலிகாம் துறையில் பிஎஸ்என்எல் பங்கு குறித்து எழுப்பிய கேள்விக்கு மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்னவ் பதில் அளித்து இருந்தார்.
5ஜி டெஸ்டிங் செய்வதற்கான உபகரணங்களை வழங்க பிஎஸ்என்எல் நிறுவனம் டிசிஎஸ்-இடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் பிஎஸ்என்எல் நிறுவனம் 5ஜி சேவைகளை துவங்க முடியும்.
அதில் பிஎஸ்என்எல் இந்திய டெலிகாம் துறையில் பிஎஸ்என்எல் உறுதியான நிறுவனமாக மாறழும் என தெரிவித்தார். இதோடு நாடு முழுக்க பிஎஸ்என்எல் நிறுவனம் நாட்டின் கிராமபுறங்களில் 1 லட்சத்து 35 ஆயிரம் மொபைல் டவர்களை வைத்திருக்கிறது. இந்த பகுதிகளில் மற்ற டெலிகாம் நிறுவனங்கள் முழுமையாக களமிறங்காத நிலையே தொடர்ந்து நீடிக்கிறது என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
தொலைதூரப் பகுதிகளிலும் 5ஜி நெட்வொர்க் கிடைக்கும்
தொலைத்தொடர்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியை ஆண்டுக்கு ரூ.500 கோடியில் இருந்து ரூ.4,000 கோடியாக உயர்த்தி புதிய ஸ்டார்ட்அப்கள் ஊக்குவிக்கப்படும் என்று வைஷ்ணவ் கூறினார். இந்தியாவின் தொலைதூர பகுதிகளுக்கு 5G சேவைகளின் பலன்களை வழங்குவதில் மாநில தொலைத்தொடர்பு சேவை வழங்குனரின் 5G சேவைகள் முக்கிய பங்கு வகிக்கும் என்று அமைச்சர் உறுதிப்படுத்தினார்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile