தமிழ்நாட்டில் BSNL 4G சேவை இந்த மாவட்டத்தில் வந்தாச்சு, எங்கே தெரியுமா?

Updated on 13-Jun-2023
HIGHLIGHTS

BSNL ) தனது 4G சேவையை நம்ம தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது.

BSNL யின் அதன் 4G தொழில்நுட்பத்தை சிறந்து வழங்க டாட்டா கன்சல்டன்சி சர்வீஸ் உடன் கைகோர்த்துள்ளது

BSNL யின் அதன் 4G தொழில்நுட்பத்தை சிறந்து வழங்க டாட்டா கன்சல்டன்சி சர்வீஸ் உடன் கைகோர்த்துள்ளது

அரசுக்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்( BSNL )  தனது 4G  சேவையை நம்ம தமிழ்நாட்டில் தூத்துக்குடி  மாவட்டத்தில் அறிமுகம் செய்ய  தயாராகி வருகிறது.

BSNL யின்  அதன் 4G தொழில்நுட்பத்தை சிறந்து வழங்க  டாட்டா  கன்சல்டன்சி சர்வீஸ் உடன் கைகோர்த்துள்ளது  தொலைத்தொடர்புத் துறையின் (DoT) கீழ் உள்ள ஆராய்ச்சிப் பிரிவான டெலிமேடிக்ஸ் மேம்பாட்டு மையம் (C-DoT) மற்றும் பெங்களூருவில் உள்ள TEJAS நெட்வொர்க்குகளின் ஆதரவுடன், அதிகாரப்பூர்வ அறிக்கை கூறுகிறது.

இந்த அப்க்ரேட் நடக்கும்போது  தற்பொழுது தூத்துக்குடி பகுதியில் 222 டவர்களுக்கு 10 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் கொண்ட 4ஜிக்கு அப்டேட் செய்யப்படும் இதன் நோக்கம் என்னவென்றால் இந்த  டவர்களில்  வழங்கப்படும் அனைத்து ஹார்டவெரும்  5G உள்ளமைக்கப்பட்ட  பவர்  கொண்டிருக்கும் இதன் மூலம் 5G  சொப்ட்வருக்கு  அப்டேட் செய்ய முடியும்.

இருப்பினும் இதில் இந்த 222 டவர்கள் மட்டுமில்லாமல் மேலும் 24 டவர்களுக்கு மேலே வைக்க திட்டடமிடப்பட்டுள்ளது , இதன் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில்  BSNL மொபைல் கவரேஜ்  மேலும் சிறப்பானதாக இருக்கும்.

இதை தவிரபாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) ஈரோடு மற்றும் திருநெல்வேலி மாவட்டத்திலும் 4ஜி சேவையை விரைவில் தொடங்கும் என்று TheHindu செய்தி வெளியிட்டுள்ளது

அறிக்கையின் படி BSNL யின்  ஈரோடு  வணிக பகுதி மேலாளர் ஆன எஸ் கிருஷ்ண குமார்  ஈரோடு மற்றும் திருப்பூர் வருவாய் மாவட்டமான  காங்கேயம் மற்றும் தாராபுரம் பகுதிகளும் அடங்கும் என கூறப்பட்டுள்ளது 

இந்த  2G/3G லிருந்து 4G யில் அப்க்ரேட் செய்ய ஈரோடு மாவட்டத்தில் 324 டவர்களும்  மற்றும் திருநெல்வேலியில்  309 டவர்களும்  10 மெகா ஹெர்ட்ஸ்  ஸ்பெக்ட்ரம் பயன்படுத்தி  4ஜிக்கு அப்டேட் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் திருநல்வலி  பகுதியில் 46 புதிய 4ஜி டவர்களை இன்ஸ்டால் செய்ய பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது, இது திருநெல்வேலி மாவட்டத்தில் மொபைல் கவரேஜை மேம்படுத்தும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :