தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) தூத்துக்குடி மாவட்டத்தில் விரைவில் 4ஜி சேவையை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. உள்நாட்டு தொழில்நுட்பத்தை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க ,BSNL இந்த முயற்சிக்கு ஒரு சொந்த 4G தொழில்நுட்பத்தை பின்பற்ற டாடா கன்சல்டன்சி சர்வீஸ் (TCS), டெலிமேடிக்ஸ் மேம்பாட்டு மையம் (C-DoT) மற்றும் TEJAS நெட்வொர்க்குகளுடன் கூட்டு சேர்ந்துள்ளது.
Hindu, வின் அறிக்கையின் படி BSNL தூத்துக்குடி தற்பொழுது பகுதியில் உள்ள அனைத்து 222 டவர்களையும் 10 MHz ஸ்பெக்ட்ரம் பயன்படுத்தி 4G ஆக மேம்படுத்தும். இந்த தொழில்நுட்பத்தின் அப்டேட்களை என்னவென்றால் டவர்களில் வழங்கப்படும் ஹார்டவெர் 5G கெப்பாசிட்டி கொண்டிருக்கும்.மேலும் இது எதிர்காலத்தில் சாப்டவெர் 5G டெலக்னோலஜி அப்டேட்டில் தடையின்றி கிடைக்க உதவும்
கூடுதலாக BSNL மேலும் புதிய 24 4G டவர்களை தூத்துக்குடியில் நாட திட்டமிட்டுள்ளது, இதன் மூலம் அதன் சுற்றுப்புறத்தில் மொபைல் கவரேஜை சிறப்பாக கிடைக்க உதவும். மேலும் மொபைல் வாடிக்கையார்களுக்கு சிறப்பான கனெக்டிவிட்டி அனுபவத்தை வழங்குகும்
இந்த நேடவெர்க் அப்டேட் பிறகு மேலும் பயனர்களின் அனுபவம் மிகவும் சிறப்பாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது இதன் மூலம் ஹை ஸ்பீட் தொலைத்தொடர்பு சேவை கிடைக்கும்.
இந்த சேவைகளை பெற விரும்புவோர் BSNL 2G மற்றும் 3G சிம் கார்டுகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் 4ஜி சிம் சிம்கார்டகளுக்கு அப்க்ரேட் செய்ய வேண்டும் அதாவது இந்த பிஎஸ்என்எல் 4ஜி சிம் கார்டுகள், அருகிலிருக்கும் அந்த அந்த மாவட்டங்களில் உள்ள BSNL வாடிக்கையாளர் சேவை மையங்களில் இருந்து வாங்கலாம்.
BSNL யில் பல இடையூருக்கு பிறகு 4G மற்றும் 5G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்பட்டுள்ளது BSNL நிறுவனத்தில் மொத்தம் ரூ.89,047 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய பகுதியை பெற்ற பிறகு, BSNLயின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் ரூ.1,50,000 கோடி யில் இருந்து ரூ.2,10,000 கோடியாக உயரும்.
BSNL யின் 4G மற்றும் 5G நெட்வொர்க்களுடன் சிறப்பான நன்மை கொண்டு வர உதவும், ஏற்கனேவே மற்ற டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ வோடபோன் 4g, 5g சேவையை கொண்டுவந்துள்ளது, அதனை தொடர்ந்து தற்பொழுது BSNL 4G சேவையை கொண்டு வர தயாராகியுள்ளது, இதன் மூலம் தனியார் நெட்வொர்க்குகளிலிருந்து BSNL நேடவெர்க்க்ளுக்கு மாறலாம் மற்றும் இதன் மூலம் சிறந்த அனுபவத்தயும் தர முடியியும்
மேலும் மேலே குறிப்பிட்டது போல 4G டவர்களில் 5G சாப்டவெருக்கு அப்டேட் செய்ய முடியும் இதன் மூலம் 4G லிருந்து 5G சேவையை பெறலாம் இதன் மூலம் பயனர்கள் சிறப்பான சேவையும் பெற முடியும்.