இந்திய முழுவதும் அதிவேக 4ஜி சேவையை துவங்கும் வேலையில் BSNL தீவிரமாக வேலை செய்கிறது

Updated on 26-May-2018
HIGHLIGHTS

மக்கள் அதிகமாக 4G சேவையை விரும்பும் நிலையில் BSNL அனைத்து இடங்களிலும் அதன் 4G சேவை கிடைக்க தீவிரமாக வேலை செய்கிறது.

BSNL  விரைவில் துவங்க இருப்பதாக கூறப்படும் 4ஜி சேவைகளை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் புதிதாக யுனிவர்சல் சிம் அல்லது யுசிம் கார்டினை ரூ.20 கட்டணம் செலுத்தி வாங்க வேண்டும். பின் 4ஜி சேவை துவங்கப்பட்டதும், வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் அலுவலகம் அல்லது ஸ்டோர் சென்று புதிய யுசிம் கார்டினை ரூ.20 விலையில் வாங்க முடியும். 

பழைய வாடிக்கையாளர்கள் அதே நம்பரை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதோடு, மற்ற நிறுவன வாடிக்கையாளர்களும் தங்களது பழைய மொபைல் நம்பரை மாற்றாமல் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை பயன்படுத்த முடியும்.

முன்னதாக பிஎஸ்என்எல் 3ஜி சேவைகள் 2009-ம் ஆண்டு வாக்கில் துவங்கப்பட்டது. ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக பல்வேறு கவர்ச்சிகர சலுகைகளை பிஎஸ்என்எல் அறிவித்து வருகிறது. மார்ச் 2018 பிஎஸ்என்எல் நிறுவனம் 40 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்து இருப்பதாக அறிவித்திருந்தது. 

மொபைல் நம்பர் போர்டபிலிட்டி சேவையின் மூலம் இதே மாதத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் 12 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்து இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. கவர்ச்சிகர சலுகைகள், புதிய திட்டங்கள் மற்றும் சீரான சேவையை வழங்குவதே பிஎஸ்என்எல் சேவையில் இணைவோர் எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :