BSNL yearly cheapest recharge plan takes jio and airtel
அரசு நடத்தி வரும் சொந்த டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சர் நிகம் லிமிடெட் (BSNL), அதன் கஸ்டம்ர்களுக்கு 84 நாட்கள் சேவை வேலிடிட்டி வழங்கும் ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. நாம் பேசும் இந்த திட்டமானது FUP (fair usage policy) யின் அதிக டேட்டா வழங்கும் திட்டத்தில் ஒன்றாகும், அதாவது இந்த மற்ற டெலிகாம் நிவனங்கள் 84 நாட்களுக்கு தினமும் 1.5GB டேட்டா மட்டுமே வழங்குகிறது மேலும் இதன் விலையில் ரூ,599க்கும் மேலாக தான் இருக்கிறது.
ஆனால் BSNL இந்த திட்டத்தில் கஸ்டமருக்கு தினமும் 3GB டேட்டா வழங்குகிறது இதை தவிர இந்த திட்டத்தில் மற்ற என்ன நன்மைகள் வழங்குகிறது என பார்க்கலாம் வாங்க.
BSNL யின் இந்த திட்டமானது ரூ,599 யில் வரும் ப்ரீபெய்ட் திட்டமாகும் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 3GB யின் டேட்டா மற்றும் தினமும் 100 SMS நன்மையை வழங்குகிறது ஆகமொத்தம் இந்த சேவையின் வேலிடிட்டி அதிகபட்சமாக 84 நாட்களுக்கு வருகிறது. ஆகமொத்தம் இந்த திட்டத்தில் 252GB யின் FUP டேட்டா வழங்குகிறது.
இந்த திட்டமானது BSNL அதன் வொயிஸ் வவுச்சர் திட்டத்தின் செக்சனின் கீழ் வருகிறது மற்றும் இந்த இந்த திட்டம் நீண்ட நாட்களாகவே இருக்கிறது BSNL முதலில் சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ 599 திட்டத்தை வெளியிட்டது மற்றும் அதை WF (வொர்க் ஃப்ரம் ஹோம்) திட்டம் என்று அழைத்தது.
BSNL இந்தியா முழுதும் 75,000க்கும் அதிகமான 4G சைட்ஸ் ஜூன் 2025 நடப்படும் என கூறப்பட்டுள்ளது மேலும் இது ஒரு லட்சத்திற்க்கு அதிகமான 4G சைட்ஸ் கொண்டுவரப்படும்.
இந்தியாவில் தற்போது மிகவும் குறைந்த விலையில் டெலிகாம் சேவை வழங்குநராக பிஎஸ்என்எல் உள்ளது. பிஎஸ்என்எல் பயனர்கள் எதிர்கொள்ளக்கூடிய ஒரே பிரச்சனை, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் 4ஜி கிடைக்காது என்பதும், அது மோசமான நெட்வொர்க் அனுபவத்தைக் குறிக்கலாம் என்பதும் ஆகும்.
இதையும் படிங்க Jio ரூ,200க்குள் அதிக வேலிடிட்டியுடன் வரும் சூப்பர் மஜாகோ திட்டம் காலிங் மற்றும் டேட்டா போன்ற பல நன்மை