BSNL யின் வெறும் 397ரூபாயில் 5 மாதம் வேலிடிட்டி, jio,Airtel ஓடிப்போ

Updated on 29-Aug-2024
HIGHLIGHTS

தனியார் டெலிகாம் நிறுவனங்கள் விலையை உயர்த்திய பிறகு, ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் நம்பர்களை BSNLக்கு போர்ட் செய்துள்ளன

பி.எஸ்.என்.எல் 397ரூபாயில் 150 நாட்கள் வேலிடிட்டியை வழங்கும்

BSNL சிம் பயன்படுத்தினால் இன்றைய செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

தனியார் டெலிகாம் நிறுவனங்கள் விலையை உயர்த்திய பிறகு, ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் நம்பர்களை BSNLக்கு போர்ட் செய்துள்ளனர். அந்த வகையில் BSNL குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி உடன் பல நன்மைகள் வழங்குகிறது, தனியார் டெலிகாம நிறுவனங்களில் மிக பெரிய நிறுவனமான ஜியோவே திணறி வருகிறது அதாவது பி.எஸ்.என்.எல் 397ரூபாயில் 150 நாட்கள் வேலிடிட்டியை வழங்கும் அதாவது 5 மாதம் வேலிடிட்டி வரை வேலிடிட்டி வழங்குகிறது சரி இதன் முழு விவரங்கள் பற்றி பார்க்கலாம்.

நீங்கள் BSNL சிம் பயன்படுத்தினால் இன்றைய செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். 400 ரூபாய்க்கும் குறைவான விலையில் வரும் BSNL இன் ரீசார்ஜ் திட்டத்தைப் பற்றி நாங்கள் உங்களுக்குச் சொல்லப் போகிறோம். இந்த மலிவான குறைந்த விலை திட்டம், ஒரே நேரத்தில் 5 மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்யும் பதற்றத்திலிருந்து உங்களை விடுவிக்கிறது.

BSNL யின் 397 ரூபாய் கொண்ட திட்டம்.

பிஎஸ்என்எல் லிஸ்ட்டில் ரூ.397 யின் சிறந்த ரீசார்ஜ் திட்டம் உள்ளது. BSNL யின் இரண்டாம் நிலை சிம் ஆகப் பயன்படுத்தும் பயனர்களுக்கு நிறுவனத்தின் இந்தத் திட்டம் சிறந்தது. BSNL இன் இந்த குறைந்த விலை ரீசார்ஜ் திட்டத்தில், நீங்கள் 5 மாதங்கள் அதாவது 150 நாட்கள் வேலிடிட்டியாகும்

BSNL-397-.jpg

BSNL யின் இந்த ரூ.397 திட்டத்தின் நன்மைகளைப் பற்றி நாம் பேசினால், இதில் முதல் 30 நாட்களுக்கு வரம்பற்ற இலவச காலிங் வசதியைப் வழங்குகிறது எந்த நெட்வொர்க்கிலும் இலவச காலிங்களை செய்யலாம். இருப்பினும், நிறுவனம் 150 நாட்களுக்கு பயனர்களுக்கு இலவச இன்கம்மிங் கால்களை வழங்குகிறது. அதாவது, இதன் மூலம் உங்கள் சிம் எக்டிவாக இருக்கும் என்பது உறுதி

இலவச அவுட்கோயிங் கால்களை போலவே, முதல் 30 நாட்களுக்கு 60 ஜிபி இன்டர்நெட் டேட்டா வழங்கப்படுகிறது. தினமும் 2ஜிபி டேட்டாவைப் பயன்படுத்தலாம். தினசரி டேட்டா லிமிட் முடிந்ததும், 40Kbps ஸ்பீட் மட்டுமே கிடைக்கும். திட்டத்தில் முதல் 30 நாட்களுக்கு தினமும் 100 இலவச SMS வழங்குகிறது

இதையும் படிங்க BSNL யின் வெறும் 147 யில் 30 நாட்கள் வேலிடிட்டி அதிர்ச்சியில் JIo

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :