BSNL வழங்குகிறது அதிரடி ஆபர் ரூ.39-க்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்…!

BSNL வழங்குகிறது அதிரடி ஆபர்  ரூ.39-க்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்…!
HIGHLIGHTS

BSNL . அறிவித்திருக்கும் ரூ.39 பிரீபெயிட் சலுகையில் பயனர்களுக்கு தினமும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித தினசரி லிமிட்டின்றி வழங்கப்படுகிறது.

BSNL . நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.99 மற்றும் ரூ.319 விலையில் புதிய சலுகைகள் எவ்வித லிமிட்டின்றி  அறிவிக்கப்பட்டது. தற்சமயம் ரூ.39 விலையில் புதிய சலுகையை  BSNL அறிவித்துள்ளது.

BSNL . அறிவித்திருக்கும் ரூ.39 பிரீபெயிட் சலுகையில் பயனர்களுக்கு தினமும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித தினசரி லிமிட்டின்றி  வழங்கப்படுகிறது. புதிய திட்டத்தில் பத்து நாட்கள் வேலிடிட்டி கொண்டிருப்பதோடு இந்தியா முழுக்க அனைத்து BSNL  வட்டாரங்களிலும் வழங்கப்படுகிறது.

https://static.digit.in/default/587d6ee29d1c2d9752aaf940cddd04073f2a9bf8.jpeg

அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மட்டுமின்றி, தினமும் 100 SMS .பிரத்யேக ரிங்-பேக் டோன் உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது. எனினும் மற்ற பி.எஸ்.என்.எல். சலுகைகளை போன்றே இலவச வாய்ஸ் கால் சேவை மும்பை மற்றும் டெல்லி போன்ற வட்டாரங்களில் பொருந்தாது.

ரூ.99 விலையில் கிடைக்கும் BSNL .சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், பிரத்யேக ரிங்-பேக் டோன் 26 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ.319 சலுகையில் இதே சலுகைகள் 90 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.  இருப்பினும் இரண்டு சலுகைகளிலும் SMS வசதி வழங்கப்படவில்லை.

https://static.digit.in/default/70ea55a3869e197e9d6afb7133258711b4e4e55c.jpeg

ரிலையன்ஸ் ஜியோ ரூ.49 விலையில் கிடைக்கும் சலுகையில் 28 நாட்களுக்கு, தினமும் 50 SMS  மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதே சலுகையில் 1 ஜிபி அதிவேக 4ஜி டேட்டாவும், 1 ஜிபி அளவு நிறைவுற்றதும், டேட்டா வேகம் 64Kbps ஆக குறைக்கப்படுகிறது.

https://static.digit.in/default/b640de8db43e92148ac4d758622b23d02bad6f44.jpeg

இத்துடன் ஜியோ ஆப்களை இலவசமாக பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது. இருப்பினும் இந்த சலுகை தற்சமயம் வரை ஜியோபோன் பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. மற்றபடி ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு இதே போன்ற சலுகைகள் ரூ.98 விலையில் வழங்கப்படுகின்றன.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo