BSNL ரூ.349 பிரீபெயிட் சலுகையை மாற்றியமைத்துள்ளது.
BSNL . நிறுவனம் ரூ.349 பிரீபெயிட் சலுகையை மாற்றியமைத்துள்ளது. முன்னதாக ரூ.399 சலுகையை BSNL மாற்றியமைத்தது
BSNL . நிறுவனம் ரூ.349 பிரீபெயிட் சலுகையை மாற்றியமைத்துள்ளது. முன்னதாக ரூ.399 சலுகையை BSNL மாற்றியமைத்தது. புதிய மாற்றத்தின் மூலம் ரூ.349 சலுகையில் பத்து நாட்கள் வேலிடிட்டி கூடுதலாக கிடைக்கும்.
ரூ.349 சலுகையை தேர்வு செய்யும் BSNL . வாடிக்கையாளர்களுக்கு இனி தினமும் 1 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 SMS . உள்ளிட்டவை 64 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த சலுகையில் 54 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டது.
இதுதவிர BSNL . நிறுவனம் 2.2 ஜி.பி. டேட்டா ஏப்ரல் 30 வரை வழங்கப்படுகிறது. இந்த டேட்டாவினை தினசரி டேட்டா அளவு தீர்ந்ததும் பயன்படுத்திக் கொள்ள முடியும். ரிலையன்ஸ் ஜியோ சலுகையுடன் ஒப்பிடும் போது BSNL . ரூ.349 சலுகையில் பயனர்களுக்கு குறைந்த வேலிடிட்டியில் 500 எம்.பி. குறைவான டேட்டா வழங்கப்படுகிறது.
BSNL ரூ.349 சலுகை பாரதி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ சலுகைகளுக்கு போட்டியாக அமைந்துள்ளது. இதுகுறித்து டெலிகாம் டாக் வெளியிட்டிருக்கும் தகவல்களில் ரூ.349 சலுகையின் மாற்றம் கொல்கத்தா மற்றும் உத்திர பிரதேசம் உள்ளிட்ட வட்டாரங்களில் அமலாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.349 சலுகையில் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 70 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. ஏர்டெல் நிறுவனம் ரூ.349 சலுகையில் தினமும் 3 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile