குடியரசு தினத்தை முன்னட்டு BSNL நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது.
ரூ.269 விலையில் அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு 26 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இத்துடன் 2.6 ஜி.பி. டேட்டா, 2600 நிமிடங்கள் வாய்ஸ் கால், 260 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இச்சலுகை குடியரசு தினத்தையொட்டி குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அந்த வகையில் புதிய ரூ.269 சலுகையை வாடிக்கையாளர்கள் ஜனவரி 26 (குடியரசு தினம்) முதல் ஜனவரி 31 ஆம் தேதி வரை மட்டுமே தேர்வு செய்ய முடியும். இச்சலுகை நாடு முழுக்க அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படுகிறது. ஏற்கனவே குறிப்பிடப்பட்டு இருப்பதை போன்று இச்சலுகை குடியரசு தினத்தை கொண்டாடும் வகையில் நாடு முழுக்க அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக BSNL . தனது ரூ.99 சலுகையை மாற்றியமைத்து. அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவையை மட்டும் வழங்கும் இச்சலுகையில் ஏற்கனவே 24 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்ட நிலையில், தற்சமயம் 26 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இதுதவிர ரூ.899 விலையில் பி.எஸ்.என்.எல். புதிய சலுகையை அறிவித்தது. இதில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 50 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 180 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.