BSNL New Year யின் மஜாகோ ஆபர் கூடுதலாக 30 நாட்கள் ஆகமொத்தம் 425 நாள் வேலிடிட்டி
அரசு நடத்தி வரும் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) அதன் கஸ்டமர்களுக்கு இந்த புதிய ஆண்டுகளுக்கு புதிய வருத்தத்திற திட்டத்தை கொண்டு வந்துள்ளது. தற்பொழுது நிறுவனம் அதன் 2,399ரூபாய் கொண்ட ப்ரீபெய்ட் ரீச்சார்ஜ் திட்டத்துடன் 30 நாட்கள் வரை கூடுதல் வேலிடிட்டி வழங்குகிறது, அதாவது இதில் குறிபிடத்தக்க விஷயம் என்னவென்றால் இதில் கூடுதலாக 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது அதும் இலவசமா ஆனால் இது ஒரு லிமிடெட் ஆபராக இருக்கிறது இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 425 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கும் இதனுடன் அன்லிமிடெட் காலிங், டேட்டா என பல நன்மை கிடைக்கும்
BSNL NEW YEAR திட்டம்.
பிஎஸ்என்எல் அதன் அதிகாரப்பூர்வ பிஎஸ்என்எல் X (முன்னர் ட்விட்டர்) ஹேண்டில் மூலம் தற்போதுள்ள ரீசார்ஜ் திட்டங்களில் வழங்கப்படும் கூடுதல் வேலிடிட்டி சலுகை பற்றிய தகவலை வழங்கியுள்ளது. புதிய சலுகைக்குப் பிறகு, இப்போது இந்த BSNL 2,399ரூபாய் திட்டத்தில் 395 நாட்கள் உடன் 30 நாட்கள் கூடுதல் நன்மை ஆகமொத்தம் 425 நாட்களுக்கு இதன் வேலிடிட்டி வழங்குகிறது.
This festive season, let the celebrations last even longer!
— BSNL India (@BSNLCorporate) December 25, 2024
Recharge with a ₹2399 voucher and unlock 30 additional days of unlimited connectivity with BSNL. More time, more joy, and more connection!#BSNLIndia #Christmas #ChristmasOffer #MerryChristmas pic.twitter.com/sdipeRduql
BSNL 2,399ரூபாய் கொண்ட திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் உடன் இதில் தினமும் 2GB டேட்டா ஆகமொத்தம் இதில் 850GB டேட்டா மற்றும் 100SMS நன்மை வழங்கப்படுகிறது இந்த திட்டத்தில் கூடுதலாக 30 நாட்கள் வேலிடிட்டி 425 நாட்களுக்கு வழங்குகிறது ஆனால் இந்த திட்டம் ஒரு லிமிடெட் திட்டமாகும் இது 25,2024 டிசம்பரிலிருந்து 16 ஜனவரி, 2025 வரை இருக்கும்.
BSNL மற்ற 1 ஆண்டு வேலிடிட்டி திட்டம்.
பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ.1,198.இதன் வேலிடிட்டி 365 நாட்கள். அதே நேரத்தில், பயனர்களுக்கு 3ஜிபி அதிவேக 3ஜி/4ஜி டேட்டாவை ஒரு வருடத்திற்கு எந்த தொந்தரவும் இல்லாமல் வழங்குகிறது. இதுமட்டுமின்றி, மாதந்தோறும் 30 SMS அனுப்பும் வசதியும் இந்த திட்டத்தில் உள்ளது.
இது தவிர, ஒவ்வொரு மாதமும் 300 இலவச காலிங் நிமிடங்கள் போன்ற பலன்களும் இந்த திட்டத்தில் கிடைக்கும். கூடுதலாக, இந்த திட்டத்தில் இலவச தேசிய ரோமிங் உள்ளது, இது பயனர்கள் இந்தியாவிற்குள் பயணம் செய்யும் போது இன்கம்மிங் கால்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்பதை உறுதி செய்கிறது.
இதையும் படிங்க:BSNL யின் New Year 2025 ஜனவரி ரீச்சார்ஜ் செய்து அந்த வருடம் முழுதும் நோ டென்சன்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile