digit zero1 awards

BSNL யின் அட்டகாசமான ஆபர் அல்லி தரும் 1500GB டேட்டா

BSNL யின் அட்டகாசமான  ஆபர் அல்லி தரும் 1500GB டேட்டா
HIGHLIGHTS

BSNL யின் அட்டகாசமான ஆபர் அல்லி தரும் 1500GB டேட்டா

இந்த சலுகையிலும் ரூ. 999 மதிப்புள்ள அமேசான் பிரைம் சந்தா வழங்கப்படுகிறது.

BSNL  நிறுவனம் ரூ. 1,999 விலையில் புதிய பிராட்பேண்ட் சலுகையை அறிவித்துள்ளது. பாரத் ஃபைபர் பிராட்பேண்ட் காம்போ சலுகை நொடிக்கு 200 எம்.பி. வேகத்தில் இணைய சேவையை வழங்குகிறது. முதற்கட்டமாக இச்சலுகை சென்னை மற்றும் தெலுங்கானா வட்டாரங்களில் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய 1500 சி.எஸ்.55 பிராட்பேண்ட் சலுகையில் இந்தியாவிற்குள் அனைத்து பகுதிகளுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 1500 ஜி.பி. டேட்டா, நொடிக்கு 200 எம்.பி. வேகத்தில் வழங்கப்படுகிறது. இந்த சலுகையை வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்திற்கு மட்டுமே பயன்படுத்த முடியும். மேலும் இதற்கு ஒருமாத தொகையினை பாதுகாப்பு முன்பணமாக செலுத்த வேண்டும்.

மேலும் இந்த சலுகை 90 நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதில் வாடிக்கையாளர்களுக்கு 1500 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவு தீர்ந்ததும் டேட்டா வேகம் நொடிக்கு 2 எம்.பி.யாக குறைக்கப்பட்டு விடும். 

வாடிக்கையாளர்கள் இந்த சலுகையை ஏப்ரல் 6, 2020 வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.  இந்த சலுகை ஜியோஃபைபர் ரூ. 2499 பிராட்பேண்ட் சலுகைக்கு போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளது. BSNL யின் அட்டகாசமான  ஆபர் அல்லி தரும் 1500GB டேட்டா . நிறுவனத்தின் மற்ற பாரத் ஃபைபர் சலுகைகளை போன்று இந்த சலுகையிலும் ரூ. 999 மதிப்புள்ள அமேசான் பிரைம் சந்தா வழங்கப்படுகிறது.

 எனினும், இந்த சலுகையில் 1250 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.  ஜியோஃபைர் ரூ. 2499 சலுகையில் நொடிக்கு 500 எம்.பி. வேகத்தில் இணைய சேவை வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo