BSNL நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. Rs 118 விலையில் அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் டேட்டா சலுகைகள் வழங்கப்படுகின்றன.
புதிய BSNL சலுகையில் 1 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.98 சலுகைக்கு போட்டியாக புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ ரூ.98 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 2 ஜிபி டேட்டா, 300 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
இத்துடன் ரிலையன்ஸ் ஜியோ சலுகையில் ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது. பிஎஸ்என்எல் சார்பில் PRBT டியூன் சேவை இலவசமாக வழங்கப்படுகிறது. புதிய சலுகையை ரீசார்ஜ் செய்ததும், இந்த சேவை தானாக ஆக்டிவேட் ஆகிவிடும். வாடிக்கையாளர்கள் இந்த டியூன்களை மாற்றும் போது அதற்கான கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல் புதிய ரூ.118 சலுகை சென்னை, தமிழ்நாடு, கொல்கத்தா மற்றும் பல்வேறு இதர வட்டாரங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் ரோமிங்கின் போது மும்பை மற்றும் டெல்லி வட்டாரங்களை தவிர்த்த பகுதிகளில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது.
ஜியோவின் ரூ.98 சலுகைக்கு போட்டியாக ஏர்டெல் மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்களும் சலுகைகளை அறிவித்துள்ளன. ஏர்டெல் ரூ.93 சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 1 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஐடியா வழங்கும் ரூ.109 சலுகையில் அன்லிமிட்டெட் உள்ளூர், வெளியூர் மற்றும் ரோமிங் அழை்ப்புகள், 1 ஜிபி டேட்டா, 100 லோக்கல் மற்றும் STD SMS வழங்கப்படுகிறது.
அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் அளவு நாள் ஒன்றுக்கு 250 நிமிடங்களும், வாரம் 1000 நிமிடங்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த அளவை கடந்து வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் அழைப்புகளுக்கு ஒரு நொடிக்கு ஒரு பைசா வீதம் கட்டணம் வசூலிக்கப்படும்.