சமிபத்தில் Jio, Airtel மற்றும் Vodafone Idea (Vi) அதன் திட்டத்தின் விலையை உயர்த்தியது என்பது நம் அனைவருக்கும் தெரியும், அதனை தொடர்ந்து அரசு நடத்தி வரும் பகரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL ) அதன் திட்டத்தின் வேலிடிட்டியை சத்தமில்லாமல் குறைத்துள்ளது, இருப்பினும், இப்போது இந்த அரசு நிறுவனம் அதன் பிரபலமான ரீசார்ஜ் திட்டங்களில் மாற்றங்களைச் செய்துள்ளது. சமீபத்திய மாற்றத்தில், பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) அதன் ரூ.485 ரீசார்ஜ் திட்டத்துடன் வழங்கப்படும் செல்லுபடியை குறைத்துள்ளது. அதை பற்றி முழு விவரங்கள் பார்க்கலாம்.
முன்னதாக பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) அதன் ரூ.485 ரீசார்ஜ் திட்டத்துடன் 82 நாட்கள் வேலிடிட்டியை வழங்கியது, ஆனால் இப்போது நிறுவனம் இந்த திட்டத்தின் வேலிடிட்டியை 2 நாட்கள் குறைத்து 80 நாட்களாக மாற்றியுள்ளது. இருப்பினும், இந்த திட்டத்தில் கிடைக்கும் டேட்டா நன்மைகளை நிறுவனம் அதிகரித்துள்ளது. முந்தைய சந்தாதாரர்கள் இந்த ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 1.5 ஜிபி டேட்டாவைப் பெற்றனர், ஆனால் இப்போது அவர்கள் 80 நாட்களுக்கு 2 ஜிபி தினசரி டேட்டாவைப் வழங்குகிறது.
எளிமையான வார்த்தைகளில், BSNL (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) இந்த திட்டத்தின் வேலிடிட்டியை இரண்டு நாட்கள் குறைத்துள்ளது, ஆனால் அதே விலையில் 40GB கூடுதல் டேட்டாவையும் வழங்கியுள்ளது.
இப்போது, BSNL இன் ரூ.485 ரீசார்ஜ் திட்டம் ஒரு நாளைக்கு 2ஜிபி இன்டர்நெட் டேட்டா மற்றும் 80 நாட்களுக்கு அன்லிமிடெட் கால்களை வழங்குகிறது. இது தவிர, எந்த நெட்வொர்க்கிலும் ஒரு நாளைக்கு 100 SMS கிடைக்கும்.
இதற்கிடையில், BSNL சமீபத்தில் தனது 4G நெட்வொர்க்கை மேலும் விரிவுபடுத்தி அருணாச்சல பிரதேசத்தில் இருந்து 14,500 அடி உயரத்தில் அமைந்துள்ள லடாக்கில் உள்ள ஃபோபராங் வரை அதன் 4G கவரேஜை விரிவுபடுத்தியுள்ளது. தொலைத்தொடர்பு துறை (DoT) சமீபத்தில் இந்த மாற்றத்தை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது.
போன் கால் கால் செய்யப்பட்ட இந்தியாவின் முதல் கிராமமான நபியில் மொபைல் நெட்வொர்க் சேவைகள் வந்ததைக் கொண்டாடும் வீடியோவையும் DoT வெளியிட்டது. முன்னதாக உத்தரகாண்டில் உள்ள இந்த கிராமத்தில் தொலைத்தொடர்பு வசதிகள் இல்லாததால் இது குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது. இந்த மாற்றத்திற்குப் பிறகு, தொலைதூர மலைக்கிராமங்கள் உட்பட இந்தியாவின் 98 சதவீதத்திற்கும் மொபைல் நெட்வொர்க் கவரேஜ் விரிவடைகிறது.
இதையும் படிங்க:BSNL கொண்டு வந்துள்ள சூப்பர் ஆபர் 24வது ஆண்டு விழாவிற்க்கு, 24GB டேட்டா