BSNL யின் இந்த ப்ரீபெய்டு திட்டத்தின் வேலிடிட்டியை குறைத்துள்ளது.
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) அதன் வாடிக்கையாளர்களுக்கு ரூ.94 ப்ரீபெய்ட் திட்டத்தின் பலன்களை அப்டேட் செய்துள்ளது .
BSNL நிறுவனம் ஒரு பிரபலமான ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி-ஐ குறைத்துள்ளது
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.94 ப்ரீபெய்ட் திட்டத்தில் தான் இப்போது வேலிடிட்டி குறைக்கப்பட்டுள்ளது.
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) அதன் வாடிக்கையாளர்களுக்கு ரூ.94 ப்ரீபெய்ட் திட்டத்தின் பலன்களை அப்டேட் செய்துள்ளது . தொலைத்தொடர்பு நிறுவனம் மறைமுகமாக அவ்வாறு செய்துள்ளது,. மாற்றத்திற்குப் பிறகு, வாடிக்கையாளர்களுக்கு திட்டத்தின் பலன்கள் குறைக்கப்பட்டுள்ளன. பிஎஸ்என்எல் தனது பல ப்ரீபெய்ட் திட்டங்களில் சமீப காலங்களில் செய்த காரியம் இது. இது அடிப்படையில் அரசு நடத்தும் தொலைத்தொடர்பு ஆபரேட்டரின் மறைமுக கட்டண உயர்வு ஆகும். இந்தத் திட்டத்தின் மாற்றத்தை பற்றி பார்க்கலாம்.
BSNL நிறுவனம் ஒரு பிரபலமான ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி-ஐ குறைத்துள்ளது. அதாவது TelecomTalk வலைத்தளம் வெளியிட்ட தகவலின்படி பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.94 ப்ரீபெய்ட் திட்டத்தில் தான் இப்போது வேலிடிட்டி குறைக்கப்பட்டுள்ளது.
BSNl ரூ.94 ப்ரீபெய்ட் திட்டத்தின் மாற்றம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.94 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது முன்பு 3ஜிபி டேட்டா மற்றும் 100 நிமிட வொய்ஸ் காலிங் நன்மைகளை வழங்கியது. அதேபோல் இதன் வேலிடிட்டி 90 நாட்களாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த பிஎஸ்என்எல் ரூ.94 திட்டத்தில் வேலிடிட்டி குறைக்கப்பட்டுள்ளது. அதாவது இப்போது நீங்கள் இந்த ரூ.94 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 30 நாட்கள் வேலிடிட்டி, 3ஜிபி டேட்டா மற்றும் 200 நிமிட குரல் அழைப்பு நன்மைகள் கிடைக்கும். குரல் அழைப்பு பலன் 100 நிமிடங்களிலிருந்து 200 நிமிடங்களாக உயர்ந்துள்ளது. ஆனால் வேலிடிட்டி 90 நாட்களில் இருந்து 30 நாட்களாகக் குறைந்து விட்டது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile