BSNL யின் புதிய திட்டத்தில் தினமும் 5GB இலவச டேட்டா.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கையை சவாலாக்கி இருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக பல நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றி வருகின்றனர். நாடு முழுக்க இதே நிலை தான் நீடித்து வருகிறது.
வீட்டில் இருந்து வேலைபார்க்கும் அனைவரிடமும் சீரான இணைய வசதி இருக்குமா என்பது கேள்விக்குறியான விஷயமே. அந்த வகையில் வாடிக்கையாளர்களுக்கு கைகொடுக்கும் வகையில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் 5 ஜி.பி. டேட்டாவினை இலவசமாக வழங்குவதாக தெரிவித்துள்ளது.
புதிய திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற பி.எஸ்.என்.எல். ஊக்குவிக்கிறது. இதனால் கொரோனா வைரஸ் மற்றும் அதுபற்றிய போலி தகவல்கள் பரவுவதை தடுக்க முடியும்.
புதிய சலுகையை பி.எஸ்.என்.எல். ‘Work@Home’ என அழைக்கிறது. இது பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. இதில் பயனர்களுக்கு தினமும் 5 ஜி.பி. டேட்டா நொடிக்கு 10 எம்.பி. வேகத்தில் வழங்கப்படுகிறது. பி.எஸ்.என்.எல். வழங்கும் 5 ஜி.பி. டேட்டா முற்றிலும் இலவசம் ஆகும். 5 ஜி.பி. டேட்டா தீர்ந்ததும், டேட்டா வேகம் குறைக்கப்பட்டு நொடிக்கு 1 எம்.பி. வேகத்தில் இணைய சேவை வழங்கப்படுகிறது.
இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு 4 பேர் உயிரிழந்துள்ளனர்.கொரோனா வைரஸ் பாதிப்படைந்து உலகளவில் இதுவரை சுமார் 11 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile