BSNL பொசுக்குனு திட்டத்தில் இந்த நன்மையை நிறுத்திட்டாங்க

Updated on 13-Mar-2024
HIGHLIGHTS

பிஎஸ்என்எல் பயனர்களுக்கு ரூ.599 திட்டத்தில் அன்லிமிடெட் நைட் டேட்டா வழங்கப்பட்டது.

ரூ.599 திட்டம் 2020 யில் அறிமுகப்படுத்தப்பட்டது, இது work from home கஸ்டமர்களுக்கு நல்ல தீர்வாகும்.

பிஎஸ்என்எல்-க்கு நஷ்டம், ஏனெனில் கஸ்டமர் அன்லிமிடெட் நைட் டேட்டாவைக் கொண்டிருக்கும்

இந்தியாவின் அரசு நடத்தும் தொலைத்தொடர்பு ஆபரேட்டர் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) தனது வாடிக்கையாளர்களுக்கான வரம்பற்ற இரவு டேட்டா சலுகையை நீக்கியுள்ளது. பிஎஸ்என்எல் பயனர்களுக்கு ரூ.599 திட்டத்தில் அன்லிமிடெட் நைட் டேட்டா வழங்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த பலன் நீக்கப்பட்டுள்ளது. இருப்பினும், திட்டத்தின் மற்ற நன்மைகள் முன்பு இருந்ததைப் போலவே இருக்கும்.

ரூ.599 திட்டம் 2020 யில் அறிமுகப்படுத்தப்பட்டது, இது work from home கஸ்டமர்களுக்கு நல்ல தீர்வாகும். ஆனால் அந்தத் தேவை இனி இல்லை, எனவே அன்லிமிடெட் நைட் டேட்டா வழங்குவது பிஎஸ்என்எல்-க்கு நஷ்டம், ஏனெனில் கஸ்டமர் அன்லிமிடெட் நைட் டேட்டாவைக் கொண்டிருக்கும் வரை அவர்கள் டேட்டா வவுச்சர்களுடன் ரீசார்ஜ் செய்ய வேண்டியதில்லை. BSNL யின் ரூ.599 திட்டத்தின் பலன்களைப் பார்ப்போம், அது நல்ல சலுகையா இல்லையா என்பதைப் பார்ப்போம்.

BSNL Rs 599 Plan

BSNL யின் 599ரூபாய் கொண்ட இந்த திட்டத்தில் வொயிஸ் காலிங், தினமும் 3GB டேட்டா மற்றும் தினமும் 00 SMS உடன் வருகிறது, இதனுடன் இதில் Zing, PRBT மற்றும் Astrocell அதிகப்பட்ச நன்மைகளும் அடங்கியுள்ளது இந்த திட்டம் இன்னும் வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான டேட்டாவை வழங்குகிறது. BSNLயின் இந்த திட்டத்தின் சேவை வேலிடிட்டியாகும் காலம் 84 நாட்கள். அதாவது இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் பெறும் மொத்த டேட்டா 252ஜிபி ஆகும். FUP டேட்டா பயன்படுத்தப்பட்ட பிறகு, இன்டர்நெட் ஸ்பீட் 64 Kbps ஆக குறைகிறது.

தற்போது பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்காக உள்நாட்டு 4ஜியை வெளியிடும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த தகவல் டெலிகாம் ஆப்பரேட்டர் 4G வரிசைப்படுத்த Tata Consultancy Services (TCS) யின் தலைமையிலான கூட்டமைப்பிடம் உதவி கேட்க்கிறது, இதில் Tejas Networks மற்றும் C-DoT (Centre for Development of Telematics) அடங்கியுள்ளது, பிஎஸ்என்எல் பயன்படுத்தும் டெலிகாம் கியரையும் கருவிகளை மாற்றாமல் 5ஜிக்கு மேம்படுத்த பயன்படுத்தலாம்.

இதையும் படிங்க: iQoo Z9 5G இந்தியாவில் அறிமுகம் இதன் டாப் 5 அம்சங்கள் பாருங்க

BSNL விரைவில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 4G வெளியீட்டை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொலைத்தொடர்பு நிறுவனம் ஏற்கனவே பஞ்சாபில் ஒரு சோதனையை நடத்தியது மற்றும் 2024 யில் தென்னிந்தியாவுடன் பஞ்சாபிலும் 4G பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :