பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் அதாவது பிஎஸ்என்எல் மூலம் சிறப்பு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரீசார்ஜ் திட்டம் ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கவலையை எழுப்பியுள்ளது. 197 ரூபாய்க்கான இந்த திட்டத்தில் 70 நாட்களுக்கு அன்லிமிடெட் கால்-டேட்டா மற்றும் மெசேஜிங் வசதி உள்ளது என்பது சிறப்பு. ஏர்டெல்லின் குறைந்த விலை ரீசார்ஜ் திட்டம் ரூ.155 முதல் தொடங்குகிறது. இந்தத் திட்டத்தைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பிரீபெயிட் சலுகைகளை மாற்றியமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. பயனர்களுக்கு பல்வேறு வகையான சலுகைகளை அனைவருக்கும் ஏற்ற விலையில் பிஎஸ்என்எல் வழங்கி வருகிறது. தேர்வு செய்யப்பட்ட சில வட்டாரங்களில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை ஏற்கனவே வழங்கப்பட்டு இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தது.
அதிக நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையை தேர்வு செய்ய விரும்புவோருக்காக பிஎஸ்என்எல் நிறுவனம் அசத்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி புதிய சலுகை 70 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. பிஎஸ்என்எல் புதிய பிரீபெயிட் சலுகையின் விலை ரூ. 197 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இலவச பலன்களின் வேலிடிட்டி 15 நாட்கள் மட்டுமே ஆகும். அதன் பின் இவற்றை பயன்படுத்த கட்டணங்கள் வசூலிக்கப்படும். புதிய பிஎஸ்என்எல் ரூ. 197 சலுகை பெரும்பாலான டெலிகாம் வட்டாரங்களில் வழங்கப்பட்டு வருகிறது. எனினும், சில வட்டாரங்களில் இது வழங்கப்படாது என்றே தெரிகிறது.
2021 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட பிஎஸ்என்எல் ரூ. 197 சலுகை 180 நாட்கள் வேலிடிட்டி வழங்கி வந்தது. இதில் 18 நாட்களுக்கு இலவச பலன்கள் வழங்கப்படுகிறது. தற்போது டெலிகாம் துறையில் சலுகை விலை மற்றும் பலன் விவரங்கள் தொடர்ந்து மாற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பிஎஸ்என்எல் ரூ. 197 சலுகையின் பழைய பலன்கள் மாற்றப்பட்டுவிட்டது