பட்டய கிளப்பும் BSNL வெறும் ரூ,250 யில் 45 நாட்கள் வேலிடிட்டி தலையை பிச்சிக்கும் Jio

Updated on 05-Sep-2024
HIGHLIGHTS

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) ரூ.250-க்குள் திட்டம் கொண்டு வந்துள்ளது

சமீபத்தில் ரூ.249, ரூ.299 மற்றும் ரூ.329 திட்டங்களின் ஸ்பீட் லிமிட்டை அதிகரித்துள்ளது.

BSNL இப்பொழுது ரூ, 249யில் 45 நாட்கள் வேலிடிட்டியுடன் பல நன்மைகள் வழங்குகிறது அவை என்ன என்ன என்பாய் பார்க்கலாம்.

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) ரூ.250-க்குள் திட்டம் கொண்டு வந்துள்ளது அதன் இதன் நன்மையில் தான் இருக்கிறது ட்விஸ்ட் இந்தியாவின் முக்கிய டெலிகாம் ஆபரேட்டர்களான ஜியோ, ஏர்டெல் மற்றும் VI ஆகியவை இந்த ஆண்டு ஜூலையில் தங்கள் கட்டணத் திட்டங்களின் விலைகளை அதிகரித்தன. ரீசார்ஜ் திட்டங்கள் சராசரியாக 15 சதவீதம் அதிகரித்தது மற்றும் இந்த அதிகரிப்பு ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் கஸ்டமர்களை பாதித்தது. இதைக் கருத்தில் கொண்டு, அரசு நடத்தி வரும் BSNL இது போன்ற மக்களின் துன்பத்தை புரிந்து கொண்டு குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி நன்மையுடன் வரும் பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது அந்த வகையில் BSNL இப்பொழுது ரூ, 249யில் 45 நாட்கள் வேலிடிட்டியுடன் பல நன்மைகள் வழங்குகிறது அவை என்ன என்ன என்பாய் பார்க்கலாம்.

BSNL யின் 249ரூபாய் திட்டம்.

ரூ.249 விலையில் உள்ள இந்த திட்டம், ரோமிங் உட்பட எந்த நெட்வொர்க்கிலும் அன்லிமிடெட் வொயிஸ் காலிங்கயும்வழங்குகிறது. இது தவிர, இந்த திட்டத்தில் பயனர்கள் 45 நாட்களுக்கு 2ஜிபி அதிவேக தினசரி டேட்டாவைப் வழங்குகிறது இந்த திட்டம் தினசரி 100 SMS வசதியையும் வழங்குகிறது.

BSNL யின் 108ரூபாய் கொண்ட திட்டம்.

இந்த ரூ.108 திட்டம் தேசிய ரோமிங் உட்பட எந்த நெட்வொர்க்கிலும் டருளி அன்லிமிடெட் வொயிஸ் கால்களை வழங்குகிறது. இது தவிர, இந்த திட்டத்தில், பயனர்கள் 28 நாட்களுக்கு வேலிடிட்டியை வழங்குகிறது இதை தவிர இதில் 1 ஜிபி அதிவேக தினசரி டேட்டாவைப் வழங்குகிறது இருப்பினும், இந்த திட்டத்தில் இலவச SMS எதுவும் இல்லை. இதில் லோக்கல் /STD SMSக்கு ரூ,2, லோக்கல் SMSக்கு 80பைசாவும் நேஷனல் ரூ,1.20SMS மற்றும் இண்டர்நேசனல் SMSக்கு ரூ,6 வசுலிக்கப்படுகிறது.

ரீசார்ஜ் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்க

BSNL ஃபைபர் பிராட்பேண்ட் திட்டங்களின் வேகத்தை அதிகரித்தது

இதற்கிடையில், பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) சமீபத்தில் அதன் குறைந்த விலையில் ஃபைபர் பிராட்பேண்ட் திட்டங்களின் ஸ்பீட் லிமிட்டை மேம்படுத்தியுள்ளது. நிறுவனம் சமீபத்தில் ரூ.249, ரூ.299 மற்றும் ரூ.329 திட்டங்களின் ஸ்பீட் லிமிட்டை அதிகரித்துள்ளது. BSNL யின் மிகவும் குறைந்த விலையில் ஃபைபர் பிராட்பேண்ட் திட்டம் ரூ.249க்கு வருகிறது. முன்னதாக இந்த திட்டம் கஸ்டமர்களுக்கு 10 Mbps ஸ்பீடை வழங்கியது, ஆனால் இப்போது இது 25 Mbps ஸ்பீடை வழங்குகிறது. இதேபோல், மற்ற இரண்டு திட்டங்களும் – ரூ. 299 மற்றும் ரூ. 329 ஆகியவையும் இப்போது 25 எம்பிபிஎஸ் வேகத்தை வழங்குகின்றன, அவை முன்பு முறையே 10 எம்பிபிஎஸ் மற்றும் 20 எம்பிபிஎஸ் என வரையறுக்கப்பட்டது.

BSNL விரைவில் 4G

சமீபத்தில், தகவல் டெலிகாம் அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, ‘ஆத்மநிர்பர் பாரத்’ பிரச்சாரத்தின் கீழ் பிஎஸ்என்எல் 15,000க்கும் மேற்பட்ட 4ஜி தளங்களை உருவாக்கியுள்ளது என்று கூறியிருந்தார். இந்த தளங்களை பின்னர் 5ஜிக்கு மாற்ற நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதையும் படிங்க:Airtel யின் இந்த திட்டடங்கள் இருந்தால் போதும் Netflix இலவசம் கூடவே பல நன்மை

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :