BSNL யின் வெறும் ரூ,108 திட்டத்தில் ஒரு மாதம் நோ டென்சன் அன்லிமிடெட் காலிங், டேட்டா

Updated on 14-Oct-2024
HIGHLIGHTS

BSNL (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) அதன் பயனர் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது

BSNL பயனர்களுக்கு புதிய பட்ஜெட்டுக்கு ஏற்ற திட்டங்களை அறிமுகப்படுத்தியது

புதிய கஸ்டமர்களுக்க்ன ரூ.108 திட்டம் ஒரு மாதத்திற்கு நீடிக்கும்

தனியார் டெலிகாம் நிறுவனங்கள் (Vi, Airtel, Jio) தங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை அதிகரித்துள்ள நிலையில், BSNL (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) அதன் பயனர் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. ஜூலை 2024 யில் , BSNL 29 லட்சத்திற்கும் அதிகமான பயனர்கள் அரசுக்குச் சொந்தமான டெலிகாம் நிறுவனத்திற்கு மாறுவதைக் கண்டது, இதனால் அவர்கள் விலை உயர்ந்த ரீச்சார்ஜ் திட்டத்தில் இருந்து தப்பிக்கப்பட்டனர்

BSNL பயனர்களுக்கு புதிய பட்ஜெட்டுக்கு ஏற்ற திட்டங்களை அறிமுகப்படுத்தியது, புதிய கஸ்டமர்களுக்க்ன ரூ.108 திட்டம் ஒரு மாதத்திற்கு நீடிக்கும். இந்த திட்டத்தின் அனைத்து விவரங்களையும் பார்ப்போம்.

BSNL யின் ரூ,108 திட்டம்.

  • BSNL (பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்) ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது, இதன் விலை ரூ.108 மட்டுமே. இது அதன் பயனர்களுக்கு பல நன்மைகளை வழங்குகிறது.
  • BSNL யின் ரூ,108 திட்டத்தின் வேலிடிட்டி நன்மை பற்றி பேசினால், இது 28 நாட்கள் வேலிடிட்டி உடன் வருகிறது அதாவது இந்த திட்டம் அடிகடி ரீசார்ஜ் தொல்லையிலிருந்து விடுபெற விரும்புவோர்களுக்கு இது சிறந்ததாக இருக்கும்.
  • இந்த திட்டத்தில் பயனர்கள் எந்த நெட்வொர்க்கிலும் அன்லிமிடெட் காளிங்கை அனுபவிக்க முடியும்.
  • இந்த திட்டத்தின் தேட்ட நன்மையை பற்றி பேசினால், இந்த திட்டத்தில் 28ஜிபி டேட்டா உள்ளது, பயனர்கள் தினசரி 1ஜிபி வரை டேட்டாவை அக்சஸ் செய்ய முடியும்
  • இந்த திட்டத்தின்SMS நன்மை பற்றி பேசினால், 500 SMS நன்மை வழங்கப்படுகிறது.
BSNL-Recharge-plan-Rs-108-2

BSNL யின் FRC 108 திடம் என்றால் என்ன?

BSNL யின் ரூ.108 திட்டம் முதல் ரீசார்ஜ் கூப்பன் (FRC), இது புதிய கஸ்டமர்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய பயனர்கள் BSNL சிம் கார்டை வாங்கும் போது, ​​இந்த ரூ.108 ரீசார்ஜ் மூலம் அதை செயல்படுத்த வேண்டும், இது முதல் 28 நாட்களுக்கு திட்டத்தின் அனைத்து நன்மைகளையும் திறக்கும்.

BSNL

BSNL யின் மற்ற நன்மை

பட்ஜெட் விருப்பங்கள் இல்லாத ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ போன்ற தனியார் ஆபரேட்டர்களுடன் ஒப்பிடும்போது பிஎஸ்என்எல் மிகவும் மலிவு மாதாந்திர திட்டங்களை வழங்குகிறது. இந்த போட்டி விலை நிர்ணயம் BSNL யின் பயனர் தளத்தின் சமீபத்திய வளர்ச்சிக்கு பங்களித்தது, ஏனெனில் அதிகமான மக்கள் தங்கள் மொபைல் சேவைகளுக்கான குறைந்த விலை விருப்பங்களைத் தேடுகிறார்கள்.

இதையும் படிங்க:Airtel யின் கிரிகெட் பேக், அன்லிமிடெட் டேட்டா, வொயிஸ் கால் உட்பட பல நன்மை

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :