BSNL செம்ம மாஸ் திட்டம் ரூ,400க்குள் 150 நாட்கள் அதிக வேலிடிட்டி உடன் வரும் பெஸ்ட் திட்டம்

BSNL செம்ம மாஸ் திட்டம் ரூ,400க்குள் 150 நாட்கள் அதிக வேலிடிட்டி உடன் வரும் பெஸ்ட் திட்டம்

இந்திய டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL)அதன் கஸ்டமர்களுக்கு ஒரு நீண்ட நாள் வேலிடிட்டியுடன் கொண்டு வந்துள்ளது அதாவது இந்த திட்டத்தின் வேலிடிட்டி முழுசா 150 நாட்களுக்கு இருக்கிறது, ஆனால் இந்த திட்டத்தில் ஒரு ட்விஸ்ட் இருக்கு மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், டேட்டா போன்ற பல நன்மை கிடைக்கும் மேலும் இந்த திட்டத்தில் என்ன என்ன நன்மை என பார்க்கலாம் வாங்க.

BSNL ரூ,397 திட்டத்தின் நன்மை

பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.397 விலையில் நீண்ட கால ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகிறது, இது 150 நாட்கள் வேலிடிட்டியாகும் . நிறுவனத்தின் வேப்சைட்டின்படி , இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ற திட்டம் முதல் 30 நாட்களுக்கு இந்தியா முழுவதும் அன்லிமிடெட் காளிங்கை வழங்குகிறது. இது தவிர, முழு வேலிடிட்டி காலத்திலும் இலவச தேசிய ரோமிங் கிடைக்கிறது. கூடுதலாக, முதல் 30 நாட்களுக்கு தினமும் 2 ஜிபி அதிவேக டேட்டா (மொத்தம் 60 ஜிபி) வழங்கப்படுகிறது. கடைசியாக, இந்த திட்டம் முதல் 30 நாட்களுக்கு 100 இலவச SMS வழங்குகிறது.

30 நாட்களின் ஆரம்ப வேலிடிட்டியாகும் காலத்திற்குப் பிறகு, உங்கள் எண் 150 நாட்களுக்கு செயலில் இருக்கும், இது தொடர்ந்து உள்வரும் அழைப்புகளை அனுமதிக்கிறது. பயனர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப கூடுதல் காலிங் சலுகைகளுக்கு ரீசார்ஜ் செய்யலாம்.

மேலும் நாம் இதே போன்ற சலுகையை ஒன்று பார்க்கலாம்

BSNL ரூ.347 ரீச்சார்ஜ் திட்டம்

பிஎஸ்என்எல் இந்த ரீசார்ஜ் திட்டத்தை 54 நாட்கள் வேலிடிட்டியாகும் வகையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது தவிர, இந்த திட்டத்தை நீங்கள் ரூ.347க்கு ரீச்சார்ஜ் செய்யலாம். BSNL- யின் இந்த திட்டத்திற்காக நிறுவனம் செய்த பதிவின்படி , BSNL-யின் இந்த ரீசார்ஜ் மூலம், நீங்கள் இப்போது உங்கள் அன்புக்குரியவர்களுடன் அதிகம் பேசலாம். நீங்கள் இன்னும் அதிகமாக பிரவுசிங் செய்ய முடியும் . இது தவிர, குறைந்த விலையில் அதிகபட்ச பலன்கள் போன்றவற்றைப் பெறலாம்.

பிஎஸ்என்எல்லின் இந்த ரீசார்ஜ் திட்டத்தில், கஸ்டமர்களுக்கு 54 நாட்களுக்கு அன்லிமிடெட் காலின் பலன் வழங்கப்படுகிறது. இது தவிர, இந்த திட்டத்தில் உங்களுக்கு 2 ஜிபி அதிவேக இன்டர்நெட் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் அதிகபட்ச டேட்டா வழங்குகிறது . இதன் பொருள் நீங்கள் ஒவ்வொரு நாளும் 2 ஜிபி டேட்டாவை பெறலாம். திட்டத்தின் பிற நன்மைகளைப் பற்றி பேசினால், திட்டத்தில் உங்களுக்கு தினமும் 100 SMS வழங்கப்படுவதைக் காண்கிறோம். இந்தத் திட்டத்தின் மூலம், நிறுவனம் தனது கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில் அதிகபட்ச நன்மைகளை வழங்குவதாகக் கூறுகிறது.

இதையும் படிங்க: BSNL 5G சேவை அடுத்த மாதம் அறிமுகம் , இனி டெலிகாம் நெட்வொர்க் பெரிய சிக்கல் தான் போங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo